மதுரையில் 100% வாக்கு அளிக்க வலியுறுத்தி விழிப்பேணர்வு இருச்சக்கர வாகன பேரணி
தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களில் 100% வாக்களிப்போம் வாசகத்துடன் கூடிய ஸ்டிக்கரை ஒட்டி, என் வாக்கு என் உரிமை விழிப்புணர்வு பதாகையுடன் நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர்கள் கலந்து கொண்ட (Pink) இருசக்கர வாகன பேரணி நடைப்பெற்றது.
இந்த பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவரும் தேர்தல் அலுவலருமான பிரவீன்குமார் கொடியாசைத்து துவக்கி வைத்தார். அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் அன்பழகன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் வானதி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த பேரணியானது காந்தி மியூசியம் வழியாக ராஜா முத்தையா மண்டபம் மாநகராட்சி அண்ணா மாளிகை, தமுக்கம் வழியாக மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை வந்தடைந்தது.
இதைத்தொடர்ந்து பேரணிக்கு வந்த பெண்கள் தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தும் விதமாக கைகளில் மெஹந்தி போட்டுக் கொண்டனர்.


