in

விஜய் பாடல்களுக்குத் தடை! அடுத்த ஷாக்! தமிழக அரசுப் பள்ளிகளில் அதிரடி உத்தரவு

Watch – YouTube Click

விஜய் பாடல்களுக்குத் தடை! அடுத்த ஷாக்! தமிழக அரசுப் பள்ளிகளில் அதிரடி உத்தரவு

தமிழக அரசுப் பள்ளிகள்ல இப்போ ஒரு புது ‘ரூல்’ போட்டிருக்காங்க, அதுதான் இப்போ சோசியல் மீடியாவுல பயங்கர விவாதத்தைக் கிளப்பிருக்கு. ஸ்கூல் ஆனுவல் டே (Annual Day) ஃபங்க்ஷன்ல தளபதி விஜய்யோட சினிமா பாட்டுக்களுக்கு ஸ்டூடண்ட்ஸ் டான்ஸ் ஆடக் கூடாதுன்னு தலைமை ஆசிரியர்களுக்கு ரகசிய உத்தரவு போயிருக்காம்!

என்னாச்சுன்னு விவரமா பார்ப்போம்.பொதுவா ஸ்கூல் ஃபங்க்ஷன்னாலே விஜய் பாட்டு தான் ஃபர்ஸ்ட் சாய்ஸா இருக்கும். ஆனா இப்போ விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சி ஆரம்பிச்சு அரசியல்ல குதிச்சதுல இருந்து சீன் மொத்தமா மாறிடுச்சு. சில ஸ்கூல்ல பசங்க டான்ஸ் ஆடும்போது கட்சிக் கொடியையும், சின்னத்தையும் காட்டுறது அதிகமாயிடுச்சு.

ஸ்கூலுக்குள்ள ‘அரசியல் சாயம்’ படியக்கூடாதுங்கிறதுக்காகத்தான் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைன்னு சொல்றாங்க.விஜய் ரசிகர்கள் இப்போ செம கடுப்புல இருக்காங்க. “ஏற்கனவே சேப்பாக்கம் மைதானத்துல வேர்ல்ட் கப் மேட்ச் நடந்தப்போ, விஜய்யோட ‘விசில்’ சின்னத்தை ஞாபகப்படுத்துதுன்னு சொல்லி விசில் கொண்டு போகவே தடை போட்டீங்க..

இப்போ பாட்டுக்கும் தடையா?”னு கேள்வி கேக்குறாங்க. விஜய்யோட அரசியல் என்ட்ரிக்கு அப்புறம் அவருக்கு எதிரா அரசாங்கம் வரிசையா செக் வைக்கிறதா ரசிகர்கள் குமுறறாங்க.இந்த மேட்டர்ல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் ஒரு கமெண்ட் அடிச்சிருக்காரு.

“விஜய் பாட்டை மட்டும் ஏன் தனியா டார்கெட் பண்றீங்க? ஸ்கூல்ல எல்லா சினிமா பாட்டுக்குமே தடை போடுங்க.. அதுதான் சரி!”னு அவர் சொன்ன கருத்துக்கு இப்போ நெட்டிசன்கள் மத்தியில ஏகப்பட்ட லைக்ஸ் குவிஞ்சுட்டு இருக்கு. விஜய்யோட அரசியல் செல்வாக்கு ஸ்கூல் பசங்க மத்தியிலயும் பரவுறதை தடுக்கத்தான் இந்த மூவ்-ஆ? இல்ல இது ஒரு சாதாரண நிர்வாக நடவடிக்கையா? அப்படின்னு இப்போ கோலிவுட்டும், பொலிட்டிக்கல் வட்டாரமும் பரபரப்பா பேசிக்கிட்டு இருக்கு!

What do you think?

சர்ச்சையை கிளப்பிய’ ஆ*பாசப் பாடல்’ திரைத்துறையினரை அதிரவைத்த மத்திய அரசின் முடிவு

வெற்றிமாறன்-சிம்பு கூட்டணியில் புதிய மாற்றம்! ‘அரசன்’ படத்தை கைவிட்டாரா நெல்சன்? ஷாக்கிங் தகவல்!