சர்ச்சையை கிளப்பிய’ ஆ*பாசப் பாடல்’ திரைத்துறையினரை அதிரவைத்த மத்திய அரசின் முடிவு
சமீபத்துல இந்தப் படத்தோட ‘சர்கே சுனார் தேரி சர்கே’ (Sarke Chunar Teri Sarke) அப்படின்னு ஒரு பாட்டு ரிலீஸ் ஆச்சு. நோரா ஃபதேஹியோட டான்ஸ் ஒரு பக்கம் இருந்தாலும், அந்தப் பாட்டுல வந்த சில வரிகள் ரொம்பவே ‘ஆபாசமா’ இருக்குதுன்னு சோசியல் மீடியாவுல நெட்டிசன்கள் கொந்தளிச்சுட்டாங்க. “இது பாட்டா? இல்ல வேற ஏதாவதா?”ன்னு கண்டனங்கள் குவிய ஆரம்பிச்சது.
கன்னடத்துல பிரேம் டைரக்ஷன்ல உருவாகிட்டு இருக்கற ‘கே.டி. தி டெவில்’ (KD: The Devil) படம், ரிலீஸாகுறதுக்கு முன்னாடியே ஒரு பெரிய பஞ்சாயத்துல சிக்கியிருக்கு. அதுவும் பாலிவுட் ஸ்டார் சஞ்சய் தத் மற்றும் நோரா ஃபதேஹி ஆடுன அந்தப் பாட்டு தான் இப்போ பெரிய விவாதத்தையே கிளப்பிருக்கு!சினிமா உலகைத் தாண்டி, இந்த ஆபாசப் பாடல் மேட்டர் இப்போ டெல்லி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வரைக்கும் போயிருச்சு.
பல தலைவர்கள் இதுக்கு எதிரா கேள்வி எழுப்பினாங்க. இதுக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதிரடியான ஒரு பதிலை கொடுத்திருக்காரு. “ஆபாசமான பாடல்களுக்கு முழுசா தடை விதிக்கப்படுது”ன்னு அவர் சொன்னது இப்போ பரபரப்பை கிளப்பிருக்கு.அமைச்சர் சொன்னதுக்கு அப்புறம், இப்போ அந்தப் பாடலை யூடியூப் மற்றும் மத்த சோசியல் மீடியா தளங்கள்ல இருந்து தூக்குற வேலையை ஆரம்பிச்சுட்டாங்க. சீக்கிரமே அந்தப் பாட்டு ஆன்லைன்ல இருந்து மொத்தமா மறைஞ்சுடும்னு தெரியுது. படம் வர்றதுக்கு முன்னாடியே இப்படி ஒரு ‘சென்சார்’ அடி விழுந்திருக்கிறது ‘கே.டி.’ படக்குழுவுக்கு ஒரு பெரிய ஷாக் தான்!
