ரகுமானை கழட்டிவிட்ட மணிரத்னம்? இசைப்புயலுக்கு பதில் யார் தெரியுமா?வியப்பில் கோலிவுட்! ஷாக்கான ரசிக..
தமிழ் சினிமாவுல ‘மணிரத்னம் – ஏ.ஆர்.ரகுமான்’ காம்போன்னா அது ஒரு தனி மேஜிக். ‘ரோஜா’ படத்துல ஆரம்பிச்ச இந்த ஹிட் கூட்டணி, போன வருஷம் வந்த ‘தக் லைஃப்’ வரைக்கும் சுமார் 34 வருஷமா பிரிக்க முடியாத ஒண்ணா இருந்துச்சு.
ஆனா இப்போ அந்த மேஜிக் கூட்டணியில ஒரு பெரிய விரிசல் விழுந்திருக்கறதா வர்ற தகவல் தான் சினிமா வட்டாரத்துல செம ஹாட் டாபிக்!மணிரத்னம் தன்னோட அடுத்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமானை விட்டுட்டு, இப்போ ட்ரெண்டிங்ல இருக்குற சாய் அபயங்கர் (Sai Abhyankar) கூட கைக்கோர்க்கப் போறாராம்.
‘ஆசா கூடா’, ‘காதலக்காதல’ன்னு இளசுகளோட பல்ஸை பிடிச்சு ஹிட் கொடுக்குற சாய் அபயங்கர், மணிரத்னம் படத்துக்கு மியூசிக் பண்ணா எப்படி இருக்கும்னு இப்போவே எதிர்பார்ப்பு எகிறிடுச்சு.
ரகுமானோட 34 வருஷ பயணம் இதோட முடிவுக்கு வருதான்னு ரசிகர்கள் கொஞ்சம் அப்செட்ல தான் இருக்காங்க.மணிரத்னம் அடுத்து ஒரு பக்கா ‘லவ் ஸ்டோரி’ பண்ணப்போறாராம். இதுல நம்ம ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ஹீரோவா நடிக்க, அவருக்கு ஜோடியா முதன்முதலா சாய் பல்லவி இணையப்போறாங்க.
விஜய் சேதுபதி ஏற்கனவே ‘செக்கச் சிவந்த வானம்’ படத்துல நடிச்சிருந்தாலும், சாய் பல்லவிக்கு மணிரத்னம் கூட இதுதான் முதல் படம்.
“சாய் பல்லவி எனக்கு ரொம்ப பிடிச்ச நடிகை”னு பல மேடைகள்ல மணிரத்னம் சொல்லியிருக்காரு, இப்போ அவங்களையே வச்சு படம் எடுக்குறது ரசிகர்களுக்குப் பெரிய ட்ரீட் தான்! இளையராஜாவுக்கு அப்புறம் ரகுமான்..
இப்போ சாய் அபயங்கர்னு மணிரத்னம் ஒரு புது ரூட்டைப் பிடிச்சிருக்காரு. இந்த ‘யூத்ஃபுல்’ கூட்டணி ஜெயிக்குமான்னு பொறுத்திருந்து பார்ப்போம்!


