”எம்.ஜி.ஆரை பற்றி சர்ச்சைப் பேச்சு! ராஜேந்திர பிரசாத் பேச்சால் வெடித்த சர்ச்சை
தெலுங்கு சினிமாவின் சீனியர் ஆக்டர் ராஜேந்திர பிரசாத், சமீபத்துல ஒரு அவார்டு பங்க்ஷன்ல பேசுன விஷயம் இப்போ தமிழ்நாட்டுல பெரிய புயலையே கிளப்பியிருக்கு. மறைந்த தெலுங்கு நடிகர் காந்தா ராவ் பத்தி புகழ்ந்து பேசப்போய், நம்ம புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை வம்புக்கு இழுத்துட்டாரு ராஜேந்திர பிரசாத்.காந்தா ராவ் கத்தி சண்டை போடுறதுல பயங்கர கில்லாடின்னு பாராட்டின ராஜேந்திர பிரசாத், “அவரோட கத்தி சண்டையைப் பார்த்து நம்ம எம்.ஜி.ஆர் கூட பயந்து நடுங்குவாரு” அப்படின்னு ஒரு போடு போட்டாரு.
இதைக்கேட்ட தமிழ் ரசிகர்கள் செம காண்டாகி, சோசியல் மீடியாவுல அவரை வச்சு செஞ்சுட்டு இருக்காங்க.இந்த விவகாரம் பெருசாகவே, தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் ஒரு காட்டமான அறிக்கையை வெளியிட்டிருக்காரு. அதுல அவர் சொன்னது இதோ:“ராஜேந்திர பிரசாத் என்னோட நல்ல நண்பர் தான்.
ஒரு நடிகரை இன்னொருத்தர் பாராட்டுறதுல தப்பில்லை. ஆனா, அதுக்காக மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை இப்படி கீழ்த்தரமா ஒப்பிட்டுப் பேசுனது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. இது தமிழ் ரசிகர்களுக்கு மட்டும் இல்ல, அங்க இருக்குற தெலுங்கு நடிகர்களுக்கே கஷ்டமா தான் இருக்கும்.”நாசர் இன்னும் சொல்லும்போது, “தமிழர்கள் எப்போதுமே என்.டி.ஆர், சாவித்திரி, வாணிஸ்ரீன்னு தெலுங்கு நடிகர்களைத் தங்களோட குடும்ப உறுப்பினர்களா தான் கொண்டாடுறாங்க.
எம்.ஜி.ஆர் வெறும் நடிகர் கிடையாது, அவர் தமிழகத்தை ஆண்ட ஒரு மாபெரும் தலைவர். என்.டி.ஆர் கட்சி ஆரம்பிக்கிறதுக்கே எம்.ஜி.ஆர் ஒரு பெரிய இன்ஸ்பிரேஷனா இருந்தவர்.
ஒரு சக நடிகரா நீங்க இதுக்கு மன்னிப்பு கேட்பீங்கன்னு நான் எதிர்பார்க்கிறேன். அது உங்க மனசுல இருந்து வரணும்”னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாரு. இப்போதைக்கு இந்த விவகாரத்துல ராஜேந்திர பிரசாத் இன்னும் மௌனம் காத்துட்டு இருக்காரு.
இது தமிழ்-தெலுங்கு சினிமா உறவுல ஒரு சின்ன விரிசலை ஏற்படுத்துமான்னு ரசிகர்கள் கவலைப்பட்டுட்டு இருக்காங்க.


