in

குத்தாலத்தில் டாக்டர் கலைஞர் இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கம் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்:

குத்தாலத்தில் டாக்டர் கலைஞர் இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கம் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்:

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சிக்குட்பட்ட ஆதாம் நகர் பகுதியில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்டம்.

மற்றும் நமக்கு நாமே திட்டம் 2023 2024, 2024 2025 கீழ் ரூபாய் 39.10 லட்சம் மதிப்பீட்டில் டாக்டர் கலைஞர் இறகு பந்து உள் விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு குத்தாலம் பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சம்சுதீன் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் கலந்து கொண்டு இறகு பந்தாட்ட உள்விளையாட்டு அரங்கத்தினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து சிறப்பித்தார்.

அப்போது மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தீய வழிகளில் செல்லாமல் விளையாட்டில் தங்களை புகுத்திக் கொண்டு சிறந்த முறையில் விளங்க வேண்டும்.

என கேட்டுக்கொண்டார் நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா, திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் அறிவுச்செல்வன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

What do you think?

தஞ்சையில் கடும் பனிப்பொழிவு

”எம்.ஜி.ஆரை பற்றி சர்ச்சைப் பேச்சு! ராஜேந்திர பிரசாத் பேச்சால் வெடித்த சர்ச்சை