தஞ்சையில் கடும் பனிப்பொழிவு
பெரிய கோவில் கோபுரம் தெரியாத அளவிற்கு பணி இருந்ததால் காலையிலேயே ஏமாற்றத்தில் சென்ற பக்தர்கள்
தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக கோடை வெயில் பகல் நேரத்தில் வாட்டி வதைத்து வரும் நிலையில் வெப்பநிலையும் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை தஞ்சை மாவட்டம் முழுவதும் திடீர் பனிப்பொழிவு இதில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு கடுமையாக பனிப்பொழிவு இருந்தது மேலும் தஞ்சை பெரிய கோவில் கோபுரம் மறைக்கும் அளவிற்கு பணிபுரிவு இருந்ததால்.
காலையிலேயே கோபுர தரிசனத்தை காண வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்த பனிப்பொழிவு காலை 8 மணி வரை நீடித்தது.


