in

தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் நடைபெறும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு

தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் நடைபெறும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள 174 தனியார் பள்ளிகளை சேர்ந்த 8,102 மாணவ, மாணவிகளும், 594 தனித்தேர்வர்களும் எழுதுகின்றனர்.

தமிழக அரசின் பாடத்திட்டத்தின் கீழ் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி முதல் ஏப்.6ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில் புதுச்சேரியிர் 147 தனியார் பள்ளியைச் சேர்ந்த 7,078 மாணவர்களும், 411 தனி தேர்வர்களும்.காரைக்கால் பகுதியில் 27 தனியார் பள்ளியை சேர்ந்த 1,024 மாணவர்களும், 183 தனி தேர்வர்களும் இந்த தேர்வை எழுதுகின்றனர். இதற்காக புதுச்சேரி பகுதியில் 20 தேர்வு மையங்களும், காரைக்கால் பகுதியில் 6 தேர்வு மையங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் பாதுகாப்பு ஏற்பாடு மற்றும் தேர்வின்போது தடையின்றி மின்சார சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

பொது தேர்வெழுதும் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு அலைபேசி மற்றும் எந்தவொரு தகவல் தொடர்பு சாதனங்களையும் எடுத்து வரக்கூடாது என்றும்,தேர்வுக்கூட அனுமதி சீட்டு இல்லாத மாணவர்கள் எக்காரணத்தை முன்னிட்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What do you think?

“குறும்பட இயக்குநருக்கு நேர்ந்த கொ*டூரம்!” ஒருதலைக் காதல் விபரீதமான கதை! வெளியான பகீர் பின்னணி!

தமிழகத்தில் திடீர் கனமழை எப்போது முடியும்?