பேயை விட ஏஐ (AI) தான் இப்போ பயங்கரம்!” சந்தானத்தின் சைபர் கிரைம் விழிப்புணர்வு! வைரல் வீடியோ.
இப்போதெல்லாம் திருட்டு பயம் வீட்டுக்கு வெளிய இல்ல, நம்ம கைக்குள்ள இருக்குற போன்லயே வந்துடுச்சு. சைபர் குற்றங்கள் பத்தி நடந்த ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியில கலந்துகிட்ட நடிகர் சந்தானம், தன்னோட வழக்கமான நக்கல் பாணியில பொதுமக்களுக்கு சில முக்கியமான விஷயங்களைச் சொல்லிருக்காரு
“முன்னாடி எல்லாம் திருடங்க நைசா வீட்டுக்குள்ள பூந்து திருடுவாங்க. ஆனா இப்போ காலம் மாறிப்போச்சு.. நைசா ஒரு வீடியோ கால் பண்ணியே மொத்தத்தையும் சுருட்டிட்டு போயிடுறாங்க“னு ஆரம்பிச்ச சந்தானம், “இந்த எல்லா தப்புக்கும் காரணம் நம்ம கையில இருக்குற இந்த போன் தான்.
இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப், பேஸ்புக்னு எல்லாத்துலயும் நாம குந்துமணி நேரம் கூட கேப் விடாம அப்டேட்லயே இருக்கோம்”னு சொன்னாரு.
ரொம்பவே எதார்த்தமா பேசுன சந்தானம், “நம்ம ஆளுங்க போனை வச்சுக்கிட்டு சும்மாவே இருக்க மாட்டேங்குறாங்க. வாழைக்கா பஜ்ஜி போடுறதுக்கு முன்னாடி மாவுல முக்கித் தடவுவாங்களே.. அந்த மாதிரி எப்பப் பாத்தாலும் போனையே தடவிக்கிட்டு இருக்கோம்.
இதைத் தெரிஞ்சுக்கிட்டு தான் அந்தத் திருட்டு பசங்க நம்மள ஈஸியா ஏமாத்திடுறாங்க. இப்போல்லாம் பேயைப் பார்த்து பயப்படுறதை விட, இந்த ஏஐ (AI) தொழில்நுட்பத்தைப் பார்த்து பயப்படுறது தான் அதிகமாயிடுச்சு”னு ஒரு போடு போட்டாரு.கடைசியா சீரியஸான ஒரு விஷயத்தையும் பதிவு பண்ணாரு. “யாராவது சைபர் மோசடியில சிக்கிட்டீங்கன்னா பயப்படாம உடனே போலீஸோட 1930 அப்படிங்கிற உதவி எண்ணுக்கு கால் பண்ணுங்க. நாம விழிப்புணர்வா இருந்தா மட்டும் தான் இந்த ஆன்லைன் திருட்டுகளை குறைக்க முடியும்”னு கேட்டுக்கிட்டாரு.


