in

ஐந்து வருடமாக அடிப்படை வசதி இன்றி தவிக்கும் மூஞ்சான் கிராம மக்கள்

ஐந்து வருடமாக அடிப்படை வசதி இன்றி தவிக்கும் மூஞ்சான் கிராம மக்கள்

ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை அருகே மூஞ்சான் கிராமம் அமைந்துள்ளது இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் கடந்த ஐந்து வருடமாக அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருவதாக குற்றம் சாட்டிய கிராம மக்கள்.

 

குறிப்பாக தங்களது கிராமத்தில் குடிநீர் இல்லாமல் ஒரு குடம் ரூபாய் 12க்கு வாங்கி பயன்படுத்தி வருவதோடு பஸ் வசதி இல்லாமல் இரவில் இரண்டு கிலோமீட்டர் வரை பாதுகாப்பு இல்லாமல் கருவேல மரங்கள் சூழ்ந்த காட்டு பகுதிக்குள் நடந்து வேலைக்குச் செல்லும் பெண்கள் நடந்து செல்வதாக வேதனை தெரிவித்ததோடு .

இது சம்பந்தமாக அதிகாரிகள் பலரையும் சந்தித்தும் பயனளிக்கவில்லை என தெரிவித்த அவர்கள் கைக்குழந்தையுடன் பெண்களும் கல்லூரி மாணவர்களும் 50க்கும் மேற்பட்ட மூஞ்சான் கிராம மக்கள் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாளில் மாவட்ட ஆட்சியரிடம் தாங்கள் சந்தித்து வரும் இன்னல்களை எடுத்துக் கூறி மனுவாக அளித்தனர்.

What do you think?

புவனகிரியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி மண்டகப்படி திருவிழா நடைபெற்றது

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து.