தமிழகத்துல ஒரு ‘ஹிட்லர்’ உருவாகிட்டு இருக்காரு – டைரக்டர் அமீர்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், மாமல்லபுரத்துல ஒரு பெரிய விழாவுக்கு ஏற்பாடு செஞ்சிருக்காரு.
ஆனா, இந்த நல்ல நேரத்துல டைரக்டர் அமீர் போட்ட ஒரு வாட்ஸ்அப் பதிவு இப்போ ஒட்டுமொத்த கோலிவுட்டையும், அரசியலையும் அதிர வச்சிருக்கு!
விஜய்யோட தனிப்பட்ட வாழ்க்கை பத்தி இப்போ சோசியல் மீடியாவுல ஏகப்பட்ட வதந்திகள் ஓடிட்டு இருக்கு. இதையெல்லாம் மனசுல வச்சுக்கிட்டு அமீர் ரொம்பவே காட்டமா சில விஷயங்களைச் சொல்லிருக்காரு:
“பெண்களுக்கு அதிகாரம் கொடுக்கப்போறேன்னு சொல்லி கட்சி நடத்துறீங்க.. ஆனா, சொந்தப் பொண்டாட்டியையும், மகளையும் வீட்டை விட்டு விரட்டிட்டு, வெளிய வந்து மகளிர் தின விழா கொண்டாடுறீங்களா?”னு நறுக்னு ஒரு கேள்வியைக் கேட்ருக்காரு.
அதுமட்டும் இல்லாம, “தமிழகத்துல ஒரு ‘ஹிட்லர்’ உருவாகிட்டு இருக்காரு”னு விஜய்யை ரொம்பக் கடுமையா விமர்சனம் செஞ்சிருக்காரு.
ஏற்கனவே விஜய்-சங்கீதா பிரிஞ்சு வாழ்றதா சொல்லப்படுற இந்த நேரத்துல, ஏஜிஎஸ் வீட்டு கல்யாணத்துக்கு த்ரிஷா கூட விஜய் ஜோடியா போனது தான் இந்த விவாதத்துக்கெல்லாம் மெயின் காரணமா அமைஞ்சிருக்கு.
“வீட்டுப் பெண்களைக் கூட சரியா நடத்தத் தெரியாத ஒருத்தர் எப்படி நாட்டுப் பெண்களுக்கு நல்லது பண்ணுவாரு?”னு ஒரு தரப்பினர் கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்டாங்க.
ஏற்கனவே கரூர் விவகாரம்னு அரசியல்ல பல பிரஷர்ல இருக்குற விஜய்க்கு, இப்போ சினிமா துறையில இருந்தே அமீர் மாதிரி ஒருத்தர் நேரடியா அட்டாக் பண்ணது பெரிய தலைவலியா அமைஞ்சிருக்கு.
மகளிர் தின விழாவை மாஸா கொண்டாடலாம்னு பிளான் பண்ண விஜய்க்கு, இந்த ‘ஹிட்லர்’ கமெண்ட் ஒரு பெரிய செக் வச்சிருக்குன்னே சொல்லலாம்.
அமீரோட இந்த அதிரடிப் பதிவுக்கு தவெக தரப்புல இருந்தோ இல்ல விஜய் ரசிகர்கள் கிட்ட இருந்தோ என்ன பதில் வரப்போகுதுன்னு தான் இப்போ எல்லாரும் வெயிட்டிங்!