புதுச்சேரியில் இலவச மனை பட்டா வழங்க கோரி சட்டசபையை தீப்பந்தத்துடன் முற்றுகையிட முயன்ற நரிக்குறவர்கள்
புதுச்சேரி அடுத்த கலிதீர்த்தால்குப்பத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவ இன மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் கடந்த 20 ஆண்டுகளாக இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஆனால் இதுவரை அவர்களுக்கு மனைபட்டா வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் வருகின்ற தேர்தலுக்கு முன்பே இலவச மனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி இன்று 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவன மக்கள் கையில் தீப்பந்தத்துடன் கோஷங்களை எழுப்பியவாறு சட்டசபையை முற்றுகையிட முயன்றனர்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீபந்தங்களுடன் வந்த நரிக்குறவ இன மக்களை அப்புறப்படுத்தினர்.இது குறித்து அவர்கள் கூறும் போது…
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மனைபட்டா கேட்டு போராடி வருவதாகவும்,இதற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் தடையாக இருக்கிறார் எனவே வருகின்ற தேர்தலுக்கு முன்பு இலவச மனப் பட்டா வழங்க வேண்டும் அப்படி இல்லாத பட்சத்தில் தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் எச்சரித்தனர்.

