in

400 ஆண்டுகளுக்கு பிறகு நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம்

400 ஆண்டுகளுக்கு பிறகு நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம்

 

நாகை அருகே தேவூர் அருள்மிகு குதம்பை நாயகி அம்பிகா சமேத ஸ்ரீ உத்தரேசமுடையார் ஆலய மகா கும்பாபிஷேகம்; 400 ஆண்டுகளுக்கு பிறகு நடைப்பெற்ற விழாவில் திறளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்.

நாகப்பட்டினம் மாவட்டம் தேவூரில் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ குதம்பை நாயகி அம்பிகா சமேத ஸ்ரீ உத்தரேசமுடையார் ஆலயம் அமைந்துள்ளது.

முற்றிலுமாக சிதிலமடைந்து கிடந்த இந்த ஆலயத்தில் சுவாமி சன்னதி, அர்த்த மண்டம், அம்பாள் சன்னதி, விமானம், விநாயகர், சன்டிகேஸ்வரர் சன்னதிகள் புதிதாக அமைக்கப்பெற்று 400 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைப்பெற்றது.

கும்பாபிஷேக விழாவானது கடந்த 2 ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், வாஸ்து சாந்தி, கோ பூஜையுடன் யாகசாலை பூஜைகள் நடைப்பெற்று பூர்ணாஹூதி தீபாரதனைகள் நடைப்பெற்று வந்தது. இன்று நான்காம் கால யாக சாலை பூஜைகள் நிறைவுப்பெற்று பூர்ணாஹூதி தீபாரதனை நடைப்பெற்றது.

தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைப்பெற்றது. சிவச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கலசத்தை சுமந்து வந்து வேத மந்திரங்கள் ஓதி ஆலயங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. தொடர்ந்து புனித நீர் தெளிக்கப்பட்டது.

 

மூலவர் உத்தரேசமுடையார், குதம்பை நாயகி அம்மாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்று மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்

What do you think?

செஞ்சி ஸ்ரீசிவசக்திவிநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா