in

நெய்வேலியில் கடலூர் வடக்கு மாவட்டம் தமிழக வெற்றி கழக செயல் வீரர்கள் கூட்டம் 

நெய்வேலியில் கடலூர் வடக்கு மாவட்டம் தமிழக வெற்றி கழக செயல் வீரர்கள் கூட்டம் 

 

கடலூர் மாவட்டம் நெய்வேலி தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழக கடலூர் வடக்கு மாவட்டம் சார்பில் நெய்வேலி சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஆனந்த் தலமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளரும் தேர்தல் பொறுப்பாளருமான அருள் பிரகாசம் கலந்து கொண்டார்.

மேலும் கூட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பூத் கமிட்டி நிர்வாகிகளை தேர்ந்தெடுத்தல் மற்றும் தேர்தலின் போது வாக்குச்சாவடி மையங்களில் அருகே தமிழக வெற்றி கழகம் சார்பில் அமைக்கப்படும் மையங்களில் நிர்வாகிகளை மேற்கொள்ளும் பணிகள் மற்றும் தேர்தல் வாக்கு சேகரிக்கும் பணியின் பொழுது நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் எவ்வாறு பொதுமக்களிடம் தமிழக வெற்றி கழக கொள்கை மற்றும் செயல்பாடுகளை எடுத்துக் கூற வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகள் மற்றும் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் நிகழ்ச்சிகள் ஒன்றிய பொறுப்பாளர்கள் மூலம் நிரப்பப்பட்ட படிவங்களை தமிழக வெற்றி கழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள செயலி மூலம் க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்து பட்டியல்கள் அனைத்தும் நிரப்பப்பட்டு தலைமைக்கு அனுப்பப்பட்டது.

நிகழ்வில் மாவட்ட பொருளாளர் சதீஷ்குமார் ஒன்றிய செயலாளர்கள் குமார் வினோத் அருண் மணிகண்டன் பிரபாகரன் நகர செயலாளர் அசார் மகளிர் அணி வெண்ணிலா உள்ளிட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

What do you think?

வடலூரில் புரட்சி பாரதம் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 

கும்பகோணத்தில் மாசி மக பெருவிழா மகாமகா குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்