வடலூரில் புரட்சி பாரதம் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
கடலூர் மாவட்டம் வடலூர் நான்கு முனை சந்திப்பு பகுதியில் நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தந்தை பெரியார் புரட்சியாளர் அம்பேத்கர் ஆகிய பெருந்தலைவர்களின் சிலை வடலூர் நகராட்சி நிர்வாகத்தால் அகற்றப்பட்டது.
இந்நிலையில் வடலூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் அகற்றப்பட்ட சிலைகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையம் முகப்பு பகுதியில் நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று வரை சிலைகளை அமைக்காமல் காலம் தாழ்த்தி வரும் வடலூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து
புரட்சி பாரதம் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புரட்சி பாரதம் கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சங்கரலிங்கம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கடலூர் மாவட்ட பொருளாளர் சிவகுருநாதன் முன்னிலை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக மாநில செய்தி தொடர்பாளர் பூவை ஆறுமுகம் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தின்போது அகற்றப்பட்ட அம்பேத்கர் மற்றும் பெரியார் ஆகிய பெருந்தலைவர்களின் ச சிலைகளை வடலூர் வள்ளலார் புதிய பேருந்து நிலைய முகப்பில் வெங்கல சிலைகளாக நிறுவ வேண்டும் எனவும்
பெருந்தலைவர்களின் சிலையை குப்பைகளை எடுத்துச் செல்லும் குப்பை வண்டியில் கொண்டு சென்ற அதிகாரிகளை வன்மையாக கண்டிக்கிறோம் என கோஷங்களை எழுப்பினர்.

மேலும் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கும் முன் சிலைகளை நிறுவாமல் காலம் தாழ்த்தினால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் புரட்சி பாரதம் கட்சி சார்பில் தக்க பாடம் புகட்டப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
நிகழ்வில் மாவட்ட செயலாளர்கள் ராஜ கீர்த்தி விக்கி துறை ,மாவட்ட துணை செயலாளர்கள் சக்திவேல், பழனிச்சாமி ஒன்றிய செயலாளர்கள் இளையராஜா ,காண்டீபன் வடலூர் நகர மூ.பே நகர துணை செயலாளர் கண்ணன் குறிஞ்சிப்பாடி நகர செயலாளர் செல்வராஜ் துணை செயலாளர் ஞானமுத்து உள்ளிட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.


