குட்டிப் பையன் வந்து நின்னாலே சிரிப்பு கேரண்டி
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஓபன் பண்ணாலே, ‘ஹாய் கைஸ்.. நான் உங்க ஜீவா’-ன்னு ஒரு குட்டிப் பையன் வந்து நின்னாலே சிரிப்பு கேரண்டி-டா!
அந்த ரெண்டு வாண்டுங்க பண்ற லூட்டிக்கு கோலிவுட்ல இருக்குற பெரிய தலைகளே ‘டஃப்’ கொடுத்துக்கிட்டு இருக்காங்க.
கொஞ்ச நாளைக்கு முன்னாடி அந்த ஜீவா பய ஒரு வீடியோ போட்டான் பாருங்க..
“இந்த உலகத்துல ரெண்டே பேருக்குள்ள தான் மச்சான் போட்டி. ஒன்னு அனிருத் சார், இன்னொன்னு எங்க அண்ணன் தேவா!” அப்படின்னு அவன் சொன்னது செம வைரல்.
இதைப் பார்த்த நம்ம ராக்ஸ்டார் அனிருத்தே நேர்ல வந்து, “தம்பி சூப்பர்டா”ன்னு கமெண்ட் போட்டாருன்னா பாத்துக்கோங்களேன் இப்போ அடுத்த லெவலுக்குப் போய், நம்ம இந்தியன் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவா மாஸ்டர் கூடவே ஒரு வீடியோ பண்ணிருக்கானுங்க.
கூலிங் கிளாஸ்லாம் போட்டுக்கிட்டு ஜீவா அதே டயலாக்கை விடுறான்: “இப்போ போட்டி ரெண்டே பேருக்குள்ள தான்… ஒன்னு எங்க அண்ணன் தேவா, இன்னொன்னு பிரபுதேவா!”
அப்புறம் என்ன… மூணு பேரும் சேர்ந்து அந்த ‘டிங்க டிங்க’ பாட்டுக்கு செமையா டான்ஸ் ஆடுனாங்க.
ஆட்டம் முடிஞ்சதும் பிரபுதேவா ஆசையா, “யாருப்பா இதுல நல்லா ஆடுனா?”ன்னு கேட்க, நம்ம ஜீவா ஒரு செகண்ட் கூட யோசிக்காம அவங்க அண்ணன் தேவாவை கை காட்டிட்டான்.
பிரபுதேவா அங்கேயே ‘எல்லாம் நேரம்டா’ங்கிற மாதிரி சிரிச்சுட்டாரு!சும்மா சொல்லக்கூடாது பிரபுதேவா மாதிரி ஒரு லெஜண்ட், கிராமத்துல இருக்குற இந்த சின்ன பசங்களோட திறமையைப் பாராட்டி அவங்களை தேடிப் போய் வீடியோ எடுத்தது நிஜமாவே ஒரு பெரிய விஷயம்.
இதைப் பார்த்துட்டு நெட்டிசன்ஸ் எல்லாரும், “அடேய் தம்பிகளா… நீங்க எங்கேயோ போயிட்டீங்கடா!“ன்னு வாழ்த்தித் தள்ளுறாங்க. அந்தப் பசங்களோட இன்னசென்ட் பேச்சும், பிரபுதேவாவோட அந்த எளிமையும் பாக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்குல? அதுலயும் ஜீவா அந்த பெரிய மனுஷனையே கலாய்க்குறது தான் ஹைலைட்டே!”

