in

அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர் ஊழியர் கூட்டமைப்பு தொடர் போராட்டம் மீண்டும் தொடங்கியது

அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர் ஊழியர் கூட்டமைப்பு தொடர் போராட்டம் மீண்டும் தொடங்கியது

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் மற்றும் ஒய்வூதியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக குழுவினரின் தொடர் காத்திருப்பு போராட்டம் பல்கலைக்கழக நிர்வாக அலுவலர் கட்டிடம் முன்பு புதன்கிழமை காலை தொடங்கியது.

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சி.சுப்பிரமணியன் தலைமை தாங்கி பேசினார்.

இணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆ.ரவி, கபில்தேவ், துணை ஒருங்கிணைப்பாளர்கள் மனோகரன், பேராசிரியர் முத்து வேலாயுதம், பேராசிரியர் இளங்கோ உள்ளிட்ட மீன் ஊருக்கு மேற்பட்ட ஆசிரியர் ஊழியர்கள் பங்கேற்று உள்ளனர்.

கூட்டத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையிலுள்ள பதவி உயர்வுகள்,
பணப்பயன்கள், ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியம் போன்றவற்றை வழங்கிட வலியுறுத்தி கடந்த ஜனவரி மாதம் முதல் உண்ணாவிரதப் போராட்டம், தொடர் உள்ளிருப்புப் போராட்டங்கள் நடத்தியதின் விளைவாக அண்மையில் தமிழக அரசு கூட்டமைப்பு பொறுப்பாளர்களை முத்தரப்புப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து பேசியது.

பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இல்ல்லாததால் இன்று புதன்கிழமை (25.02.26) முதல் பேராசிரியர்கள், ஊழியர்கள், ஓய்வூதியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாக கட்டிடம் முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக ஆசிரியர் ஊழியர் மற்றும் ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பினர்

What do you think?

ராப்பர் வேடன் ‘கெத்தா’ கல்யாணம் முடிஞ்சிருக்குடா!

குட்டிப் பையன் வந்து நின்னாலே சிரிப்பு கேரண்டி