in

அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 800 மாணவ மாணவிகளுக்கு 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் 

அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 800 மாணவ மாணவிகளுக்கு 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் 

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தகட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

விழாவிற்கு நாகப்பட்டினம் மாவட்ட திமுக செயலாளர் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் தலைமையிலும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக் முன்னிலையிலும் நடைபெற்றது.

 

நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் மாவட்ட பொறுப்பு அமைச்சரும் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு ரூபாய் ஆறு லட்சம் மதிப்பீட்டில் 800 மாணவ மாணவிகளுக்கு ஸ்கூல் பேக், குடை, நாகை மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்றிட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் மரக்கன்றுகளையும் வழங்கினார் தொடர்ந்து மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக பள்ளி வளாகத்தில் அமைச்சர் மரக்கன்றுகளை நடவு செய்தார்,

தொடர்ந்து பேசிய அமைச்சர் 234 தொகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் ஆய்வு செய்துள்ளேன் வேதாரணியத்தில் நான் தேர்ந்தெடுத்து பள்ளிக்கூடம் இது என்றும் யாருக்கும் தெரியாமல் நான் பள்ளிக்கு வந்து மரத்தடியில் அமர்ந்து படித்த மாணவர்களிடம் பேசிவிட்டு சென்றுள்ளேன் இன்று மீண்டும் இந்தப் பள்ளிக்கு தான்  வருகிறேன் என்று தெரிந்ததும் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

துணை முதலமைச்சரின் விருப்பத்திற்கு இணங்க பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஏற்பாடு செய்த வேதாரணியம் மேற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் விக்னேஷ் பலராமன் எழிலரசன் மூவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய கழக செயலாளர் உதயம் முருகையன் மற்றும்
வேதை நகர மன்ற தலைவர் & கழக நகர செயலாளர் மா.மீ. புகழேந்தி மற்றும் இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர், பள்ளி ஆசிரியர்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

What do you think?

அரசு மருத்துவமனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்த வழக்கறிஞர்

திமுக என்னும் தீய சக்தியை விரட்டி அடிப்பேன் புதிய கட்சியின் கொடியை அறிமுகம் செய்த பின் விகே சசிகலா பேட்டி