அம்பாசமுத்திரத்தில் 431வது அவதார விழா
அம்பாசமுத்திரத்தில் 431வது அவதார விழா – 100 கிலோ பழங்களால் சிறப்பு அபிஷேகம்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ராகவேந்திரா சுவாமி ஆலயம் இல் ஸ்ரீ ராகவேந்திரா சுவாமியின் 431வது அவதார தின விழாவும், 6ஆம் ஆண்டு ஜெயந்தி விழாவும் ஆன்மிக உற்சாகத்துடன் நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு சுவாமிக்கு பால், தேன், நெய், பஞ்சாமிர்தம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
மேலும் 100 கிலோக்கும் மேற்பட்ட வாழைப்பழம், ஆப்பிள், மாதுளை, திராட்சை, ஆரஞ்சு, அன்னாசி, மாம்பழம் உள்ளிட்ட பல்வேறு பழங்களும், பாதாம், முந்திரி போன்ற பருப்பு வகைகளும் பயன்படுத்தப்பட்டன.

பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ராகவேந்திரர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு “ராகவேந்திரா” நாமஜபம் செய்து தரிசனம் செய்தனர். விழா கோலாகலமாக நடைபெற்றது.


