in

நெல்லை கரியமாணிக்க பெருமாள் திருக்கோவிலில் மாசி திருக்கல்யாணம்

நெல்லை கரியமாணிக்க பெருமாள் திருக்கோவிலில் மாசி திருக்கல்யாணம்

 

நெல்லை டவுன் கரியமாணிக்க பெருமாள் திருக்கோவிலில் மாசி திருக்கல்யாணம் உற்சவத்தை ஒட்டி 1008 சுமங்கலி பூஜை நடைபெற்றது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு கலசம் வைத்து பிரார்த்தனை செய்தனர்.

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றானது நெல்லை டவுன் பகுதியில் அமைந்துள்ள கரியமாணிக்க பெருமாள் திருக்கோவில் திருக்கோவிலின் மாசி திருக்கல்யாணம் உற்சவம் மூன்று நாட்கள் கோவிலில் நடைபெற்றது.

இதனை ஒட்டி கடந்த சனிக்கிழமை பெரிய திருமஞ்சனத்துடன் உற்சவம் தொடங்கியது.

தொடர்ந்து நாம சங்கீர்த்தனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது.

திருவிழாவில் 3ம் நாளான இன்று 1008 சுமங்கலி பூஜை என்று விமர்சையாக நடைபெற்றது எதற்காக ஆண்டாள் தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

தொடர்ந்து கோவில் வளாக முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் அமர்ந்து சுமங்கலி பிரார்த்தனையில் ஈடுபட்டனர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ள பெண்கள் முன்பு கலசம் வைத்து மகாலட்சுமி தாயாரை பிரார்த்தனை செய்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.

தொடர்ந்து கும்பம் மற்றும் மலர்களால் சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டனர் பின்னர் பெண்கள் தங்கள் முன்பு வைக்கப்பட்டுள்ள கலசத்திற்கு மகாதீப ஆராதனை செய்து வழிபாடு நடத்தினர்.

தொடர்ந்து வயதில் மூத்த சுமங்கலி பெண்களிடம் ஆசி பெற்றனர் இதன் தொடர்ச்சியாக ஆண்டாள் தாயாருக்கு மகா தீபாராதனையும் நடைபெற்றது இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

 பாதாள சாக்கடை நிரம்பி கழிவுநீர் சாலையில் ஓடுவதால் பொதுமக்கள் அவதி

அம்பாசமுத்திரத்தில் 431வது அவதார விழா