அண்ணாமலையார் மலைக்கு மகா தீப ஆராதனை
அண்ணாமலையார் மலைக்கு மகா தீப ஆராதனை நிகழ்வு….. பவளக்கொடி குழுவினர் கும்மியாட்டம் ஆடி அனைவரையும் அசத்தினர்…..
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அனுதினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று அகில பாரதீய சன்னியாசிகள் சங்கத்தின் சார்பில் சமயம் சார்ந்த கருத்தரங்கம் மற்றும் பவளக்கொடி கும்மியாட்டமும் சன்னியாசிகளின் மகா மலை ஆரத்தி சங்கமம் விழா திருவண்ணாமலையில் உள்ள பவள குன்று மலை அடிவாரத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இந்திய அளவில் உள்ள பல சன்னியாசிகள் பங்கேற்று அண்ணாமலையார் மலைக்கு மகா தீபா ஆராதனைகள் செய்து வழிபட்டனர்.
முன்னதாக பவள குன்று ஆசிரமத்தில் நடைபெற்ற நிகழ்வில் பல்வேறு சன்னியாசிகள் சமயம் சார்ந்த கருத்தரங்கத்தில் பங்கேற்று சமயம் சார்ந்த போதனைகளை பக்தர்களுக்கு வழங்கினர்.
மேலும் நடைபெற்ற பவள குன்று கும்மியாட்டம் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பவளக்கொடி கும்மியாட்டம் குழுவினர் அடங்கிய பெண்கள் பக்தி பாடல்களுக்கு கும்மியாட்டம் ஆடியது அனைவரையும் கவர்ந்த ஈர்த்து.
இந்த கும்மி ஆட்டத்தின் ஒரு பகுதியாக அம்மன் வேடம் அணிந்த பெண் ஒருவர் அம்மன் பாடல்களுக்கு பக்தி நடனமாடினார்கள்.