in

பிரதமர் கொடும்பாவி எரிப்பு…புதுவையில் பாஜக- காங் மோதல்

பிரதமர் கொடும்பாவி எரிப்பு…புதுவையில் பாஜக- காங் மோதல்

டெல்லியில் நடந்த ஏஐ மாநாட்டில் இளைஞர் காங்கிரசார் அரை நிர்வாண போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்துக்கு நாடு முழுவதும் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவிதது வருகின்றனர். புதுவையில் நேற்று மாலை வைசியாள் வீதியில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் முன்பு பாஜக இளைஞரணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது ராகுல்காந்தி கொடும்பாவியை எரித்தனர் இந்த சம்பவத்தின்போது காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் இருந்தனர். ஆனால் போலீசார் யாரும் இல்லை. இதனால் பாஜக இளைஞரணியினர் ஆர்ப்பாட்டம் செய்து கலைந்து சென்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 1 பிள்ளைசாவடி சந்திப்பில் காலை காங்கிரசார் ஒன்று கூடினர்.

மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்பி, முன்னாள் முதல்அமைச்சர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்எல்ஏ, இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு நடராஜன், மகளிர் காங்கிரஸ் தலைவி நிஷா மற்றும் காங்கிரசார் 100க்கும் மேற்பட்டோர் காங்கிரஸ் மற்றும் இளைஞர் காங்கிரஸ் கொடிகளுடன் கூடினர்.

தகவல் அறிந்த ரெட்டியார்பாளையம் போலீசார் குறைந்த எண்ணிக்கையில் அங்கு வந்தனர்.அதேநேரத்தில் பாஜக நிர்வாகிகள் அலுவலகத்தில் ஒன்று கூடினர். இதனிடையே காங்கிரசார் அங்கிருந்து ஊர்வலமாக பாஜக அலுவலகம் நோக்கி முன்னேறினர்.

அவர்களை சித்தானந்தா நகர் 4வது குறுக்கு தெருவில் போலீசார் பேரிகார்டுகளை வைத்து தடுத்தனர். ஆனால் போலீசார் குறைவாக இருந்ததால் காங்கிரசார் தடுப்புகளை மீறிச் சென்று பிரதமர் மோடியின் கொடும்பாவியை எரிதது பிரதமருக்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர்.இதனால் அங்கு பெரும்பதட்டம் ஏற்பட்டது.

அப்போது அங்கு உருட்டு கட்டைகளுடன் முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் தலைமையில், செயலாளர் வெற்றிச்செல்வன் முன்னிலையில் பாஜகவினர் திரண்டனர். இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்களையும், செருப்புகளை வீசி எறிந்தனர்.

போலீசார் இருதரப்பினரையும் மோதல் ஏற்படாமல் தடுத்து நிறுத்தி விலக்கினர். பின்னர் காங்கிரசார் அங்கிருந்து மீண்டும் எல்லை பிள்ளை சாவடி சந்திப்பு அருகே வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த மோதலை தடுக்க முயன்ற எஸ்பி வம்சிதரெட்டிக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதேபோல இருதரப்பிலும் ஒரு சிலர் காயமடைந்தனர். இதனிடையே தகவலறிந்து 100க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

பாஜக அலுவலகம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

What do you think?

நாமக்கல் மோகனூர் ராகவேந்திரர் ஆலயத்தில் உலக நலன் வேண்டி சிறப்பு வழிபாடு 

சீயான் விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு வேற லெவல் குட் நியூஸ்