நாமக்கல் மோகனூர் ராகவேந்திரர் ஆலயத்தில் உலக நலன் வேண்டி சிறப்பு வழிபாடு
நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரிக்கரையில் உள்ள நஞ்சன்கூடு ஸ்ரீராகவேந்திரர் சுவாமி மட ஆலயத்தில் உலக நலன் வேண்டி ஸ்ரீ ராகவேந்திரர் அவருடைய குருநாதர் ஆகிய ஸ்ரீ மத்வாச்சாரியாரின்(ஸ்ரீ மத்வ விஜயம் ) வரலாறு பற்றி எடுத்துரைக்கும் நிகழ்வு மற்றும் ஸ்ரீ ராகவேந்திரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.


இதில் கர்நாடக மாநிலம்,தமிழ்நாடு ஆந்திரா உள்ளிட்ட மத்வாச்சாரியார் பக்தர்கள் கலந்து கொண்டு, ஸ்ரீ ராவேந்திரர், ஸ்ரீ மத்துவச்சாரியாரின் வரலாறு மற்றும் ஸ்ரீ ராகவேந்திரரின் வரலாற்றினை எடுத்துரைத்துரைக்கும் பாராயணம்இன்று நடைபெற்றது.
பின்கோயிலில் சிறப்பு வழிபாடு மிக விமர்சையாக.நடைபெற்றது. அப்போது ஸ்ரீராகவேந்திர், பிரகலாதன், ஆஞ்சி நேயர், கிருஷ்ணர், நரசிம்மர்,சிறப்பு அபிஷேகம் மற்றும் நறுமண மலர்கள், துளசி கொண்டு அர்ச்சனையும் பின் பல்வேறு தீப உபசரிப்புகளுடன் மங்கள ஆர்த்தி மஹா தீபம் காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டர் பின்னர் அன்னதான நிகழ்வு மிக விமர்சையாக நடைபெற்றது

