in

திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா கொடியேற்றம்

திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா கொடியேற்றம்

 

திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக தொடங்கியது. ஏராளமானோா் பங்கேற்று சுவாமி தாிசனம்.

தூத்துக்குடி மாவட்டம்- முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமாயிற்று.

இதனையொட்டி இன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து கொடிப்பட்டம் பூஜை செய்யப்பட்டு கோவில் வலம் வந்தது.

சிறப்பு பூஜைகளுக்கு பின்பு காலை 5.00 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் மகர லக்கனத்தில் மாசித்திருவிழா கொடியேற்றப்பட்டது.

தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. இன்று தொடங்கி திருவிழாவானது 12 தினங்கள் நடைபெறுகின்றது.

இந்த மாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 5 ஆம் திருநாளான 25 ஆம் தேதி குடவருவாயல் தீபாராதனையும், 7 ஆம் திருநாள் 27ம் தேதி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்திலும், 8ஆம் திருநாளான 28 ஆம் தேதி பச்சைசாத்தி கோலத்திலும் எழுந்தருளிகிறார்.

விழாவின் சிகர நிகச்சியான தேரோட்டம் வருகின்ற மாா்ச் 02ம் தேதி ஆம் நடைபெற உள்ளது. மேலும் 3ஆம் தேதி இரவு தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் செயல் அலுவலர் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

What do you think?

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை திரிஷா 

புதுச்சேரி அரசு நடத்தும் வேலை வாய்ப்பு முகாம்