ராமேஸ்வரம்: மீனவர்கள் 22 பேர் கைது.!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர், 4 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கை மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணைக்கு பிறகு, அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர். இன்று அதிகாலை 2 வது முறையாக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படை அதிகாரிகள் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி வியாழக்கிழமை அதிகாலை கைது செய்தனர்.
மேலும், மீனவர்கள் பயன்படுத்திய நான்கு விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 22 பேரையும் மன்னார் கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தமிழக கடலோர பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது மீனவ சமூகத்தில் அச்சத்தையும் கவலையையும் அதிகரித்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களின் குடும்பத்தினரும் மீனவ அமைப்புகளும் வலியுறுத்தியுள்ளனர்.

