நிலத் தகராறில் ஒருவர் வெட்டி படுகொலை இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றம்
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை குற்றவியல் நீதிமன்றத்தில் நில தகராறு கொலை வழக்கில் சம்பந்தபட்ட இருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
தரங்கம்பாடி தாலுக்கா மேமாத்தூர் கிராமத்தில் இராமன் கோட்டத்தில் வசிப்பவர் சித்திரன் (வயது 50). இவருக்கும் அதே தெருவை சேர்ந்த பாலமுருகன் (45),பிச்சை கண்ணு (61) அவர்களுக்கும் ,2020 ல் இடப்பிரச்சினை ஏற்பட்டது.
இதனால் சித்திரன் என்பவரை மேற்கண்ட இரண்டு குற்றவாளிகளால் வெட்டி படுகொலை செய்யபட்டார்.இதனையொட்டி செம்பனார்கோயில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்தனர்.
இந்த வழக்கு மயிலாடுதுறை நீதிமன்றத்தில் முதன்மை குற்றவியல் நீதிபதி சத்தியமூர்த்தி முன் இன்று விசாரணை செய்து குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் இருவருக்கும் தலா ரூ 5000 ஆயிரம் அபராதமும் விதித்து ஆயுள் தண்டனை வழங்கினார்.
தண்டனைபெற்ற இரண்டு குற்றவாளிகளை காவல் துறையினர் அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனர்.

