இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து கணவன், மனைவி, மகன், உயிரிழந்த பரிதாபம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அய்யனார் குளம், பரளச்சி, அருப்புக்கோட்டை, சாலையின் வழியாக சென்ற இரண்டு கார்கள் இடையில் குறுக்கே வந்த பைக் மீது மோதாமல் இருக்க வளைத்த போது எதிரே வந்த மற்றொரு கார் மீது நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் குலதெய்வ வழிபாட்டிற்கு சென்று திரும்பிய விருதுநகர் மாவட்டம் தும்முசின்னம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தம்பதி, சோலையன், விஜயலெட்சுமி, மற்றும் இவர்களது மகன் சோலை செல்வம், ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சோலையன் மற்றும் அவரது மகன் சோலை செல்வம் சம்பவ இடத்திலும், அதே காரில் பயணித்த தாய் விஜயலட்சுமி படுகாயத்துடன் மேல் சிகிச்சைக்கு மதுரைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு சென்ற கமுதி போலீசார் உடல்களை மீட்டு கமுதி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விபத்தில் கணவன் மனைவி மகன் ஆகிய மூன்று பேர் உயிரிழந்தது தும்முசின்னம்பட்டி கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


