ஸ்ரீ பிரகன் நாயகி சமேத ஸ்ரீ ஆடாவல்லீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம் முன்னுர் கிராமம் ஸ்ரீ பிரகன் நாயகி சமேத ஸ்ரீ ஆடாவல்லீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு
கும்பாபிஷேக இந்து சமய அறநிலையத் துறையின் உயர்மட்டக் குழு உறுப்பினராக உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருக்கோயிலின் தலைமை சிவாச்சாரியார் சர்வசாதகம் விகாஸ் ரத்னா, டாக்டர் சிவஸ்ரீ பிச்சை குருக்கள் அவர்கள் இன்று முன்னூர் ஸ்ரீ ஆடவல்லீஸ்வரர் திருக்கோயிலு க்கு வருகை தந்து 22.2.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ள கும்பாபிஷேக விழாவின் தொடக்க
நிகழ்வாக மகா கணபதி ஹோமம் நடத்தி ஸ்ரீ விநாயகப் பெருமான், ஸ்ரீ ஆடவல்லீஸ்வரர் மற்றும் ஸ்ரீபிரகன்நாயகி ஆகியோருக்கு பூஜைகள் செய்து கும்பாபிஷேக நிகழ்ச்சியினைத் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் ஆன்மீக அன்பர்களும் முன்னூர் கிராமப் பொதுமக்களும் திருப்பணிக்குழு உறுப்பினர் களும் கலந்து கொண்டனர்.

