மானேந்தியப்பர் திருக்கோவில் லிங்கோத்பவ கால சந்தன காப்பு சிறப்பு அலங்காரம்
மானேந்தியப்பர் திருக்கோவில் லிங்கோத்பவ கால சந்தன முழு காப்பு சிறப்பு 15 அடி பூ அலங்கார சிவலிங்கம் – இரவு முழுவதும் நான்கு கால பூஜை இளநீர், தேன் அபிஷேகத்துடன் தீபாராதனை நடைபெற்றது.

மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் அமைந்துள்ள மானேந்தியப்பர் திருக்கோவிலில் லிங்கோத்பவ கால சிறப்பு பூஜைகள் பக்தி சிறப்புடன் நடைபெற்றது.
மாணிக்கவாசகர் வழிபாட்டு குழுவின் ஏற்பாட்டில் சிவலிங்கத்திற்கு சந்தன முழு காப்பு செய்யப்பட்டு, எட்டு வகை மலர்களால் 15 அடி உயரத்தில் பூ அலங்காரம் செய்யப்பட்ட சிவலிங்கம் கண்கவர் தோற்றமளித்தது.
சாமிக்கு இளநீர், தேன் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றதுடன், தீபாராதனையும் சிறப்பாக நடைபெற்றது. முதல் கால பூஜை மாலை 7 மணிக்கு தொடங்கியது.

தொடர்ந்து இரண்டாம் கால பூஜை இரவு 10 மணிக்கு மேல் நடைபெற்றது. மூன்றாம் கால பூஜை அதிகாலை 2 மணிக்கும், நான்காம் கால பூஜை அதிகாலை 4 மணிக்கும் நடைபெற்றது.
கல்லிடைக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் இரவு முழுவதும் கலந்து கொண்டு சிவபெருமானை தரிசித்து வழிபட்டனர்.

