அருள்மிகு ஸ்ரீதிாிபுராந்தீசுவரா் திருக்கோவிலில் மகா சிவராத்திாி சிறப்பு வழிபாடு
அருள்தரும் ஸ்ரீகோமதிஅம்பாள் சமேத அருள்மிகு ஸ்ரீதிாிபுராந்தீசுவரா் திருக்கோவிலில் மகா சிவராத்திாி சிறப்பு வழிபாடு. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று திரண்டு விடிய விடிய சுவாமி தரிசனம் செய்தனா்.
சிவனை வழிபடுவதற்கும் தியானிப்பதற்கும் மிகச் சிறந்த நாள் சிவராத்திரி ஆகும். ஒவ்வொரு தமிழ் மாதமும் கிருஷ்ண பட்சம் (தேய்பிறை) சதுர்த்தசி திதி அன்று இரவு சிவராத்திரியாக கருதப்படுகிறது. மாசிமாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.
மகா சிவராத்திரி 4 கால பூஜைகளாக சிவபெருமானுக்கு நடத்தப்படுகின்றது. சிறப்புகள் வாய்ந்த மஹாசிவராத்திாி திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஸ்ரீ திாிபுராந்தீசுவரா் திருக்கோவிலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதற்காக இரவில் நவகலசங்கள் வைத்து அா்ச்சனை, ஹோமம் நடைபெற்றது. நிறைவாக பூா்ணாகுதியும் அதனை தொடா்ந்து கலவங்களுக்க மகா ஆரத்தியும் காண்பிக்கப்பட்டது. ஹோமம் நிறைவடைந்ததை அடுத்து முதல்கால பூஜைகள் இரவு 9 மணிக்கு துவங்கியது.

மூலவரான திாிபுராந்தீஸ்வரா் கோமதி அம்பாள் மற்றும் கோவிலில் உள்பிரகாரத்தில் அருள்பாலித்துவரும் மகாதேவா் ஆகியோருக்கு மாப்பொடி, மஞ்சள், திரவியம், பால், தயிா், பஞ்சாமிருதம், தேன், இளநீா், விபூதி, பன்னீா், சந்தணம் போன்ற வாசனை பொருட்கள் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றது. நிறைவாக கும்பநீா் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடா்ந்து சுவாமிக்கு சிகப்பு வஸ்திரம், சிவப்பு மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டது. மகாதேவருக்கு அா்ச்சனைநடைபெற்று பஞ்சபுராணம் பாடி மகா ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இரவு முமுவதும் பக்தா்கள் சிவனை வழிபடுவதற்கு ஏற்றவாறு கோயில் பிரகாரத்தில் மகா மிருத்ஞ்சய ஜெபம் ஜெபித்துக்கொண்டும், ஓம் நமச்சிவாய என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை சிறுவா்கள், பொியவா்கள் ஏழுதிக்கொண்டும் இருந்தனா்.
தீட்சை பெற்ற சிவனடியாா்கள் சிவலிங்க அபிஷேகம் செய்தனா். மகா சிவராத்திரியை முன்னிட்டு அனைத்து சிவாலயங்களிலும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் ஒன்றுதிரண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இந்த ஆண்டு தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை மூலம் சிவாலயங்களில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

