திருமண வாழ்க்கை பத்தி வந்த விமர்சனங்களுக்கு பிரியங்கா ரொம்ப ஓப்பன் டாக்
நம்ம ‘தமிழன்’ பட ஹீரோயின், இப்போ ஹாலிவுட் ஸ்டார் பிரியங்கா சோப்ராவுக்கும் அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸுக்கும் கல்யாணம் ஆகி 8 வருஷம் முடிஞ்சுடுச்சு.
ஆனாலும் இவங்க ரெண்டு பேருக்கும் இருக்குற 10 வயசு வித்தியாசம் தான் இன்னைக்கும் சோஷியல் மீடியால ஹாட் டாபிக்.தன் திருமண வாழ்க்கை பத்தி வந்த விமர்சனங்களுக்கு பிரியங்கா ரொம்ப ஓப்பனா பேசியிருக்காரு:
“எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல எப்போ பிரச்சனை வரும், எப்போ பிரியுவோம்னு ஒரு கூட்டம் காத்துட்டு இருக்கு. அவங்க ஏன் அப்படி நினைக்கிறாங்கன்னு எனக்குத் தெரியல. ஒருவேளை எங்க நாட்டு கலாச்சாரம், மதம், வயசு வித்தியாசம் இதெல்லாம் தான் அவங்களை அப்படி யோசிக்க வைக்குதோ என்னவோ?”னு சொல்லிருக்காரு.
“நாங்க காதலிக்க ஆரம்பிச்ச 6 மாசத்துலயே கல்யாணம் பண்ணிக்கிட்டோம். நிக் கிட்ட எனக்கு பிடிச்ச விஷயமே அவரோட ‘சின்சியாரிட்டி’ தான்.
சின்ன வயசுல இருந்தே உழைக்கிற மனுஷன். அவரோட அப்பா, அம்மா ரெண்டு பேருமே செம கூல். அதே குணம் தான் நிக்கிற்கும் வந்திருக்கு”னு கணவரைப் பாராட்டித் தள்ளியிருக்காரு.
காசு கொடுத்து குழந்தை பெத்துக்கிட்டாங்கன்னு வந்த விமர்சனத்துக்கு, “என் உடல்நிலை சரியில்லாத காரணத்தால தான் வாடகைத் தாய் முறையைத் தேர்ந்தெடுத்தேன்”னு பிரியங்கா தெளிவா விளக்கிட்டாரு.
உங்களுக்குத் தெரியுமா? பிரியங்காவுக்கு நடிகை ஆகணும்னு ஆசையே இல்லையாம்.
‘தமிழன்’ பட வாய்ப்பு வந்தப்போ வேண்டாம்னு தான் சொல்லிருக்காரு. ஆனா அவரோட அப்பா, “வீட்ல சும்மா இருக்குறதுக்கு பதில் போய் விஜய் படத்துல நடிச்சுட்டு வாயேன்”னு சொன்னதுக்காக தான் சினிமாவுக்குள்ள வந்தாராம்.
அங்க ஆரம்பிச்ச பயணம் இப்போ ஹாலிவுட் வரைக்கும் போயிருக்கு!
Watch – YouTube Click
Shorts


