in

அல்லு அர்ஜுனை நேர்ல பார்க்க 42 ரூல்ஸ் 


Watch – YouTube Click

அல்லு அர்ஜுனை நேர்ல பார்க்க 42 ரூல்ஸ் 

 

புஷ்பா’ படத்துக்கு அப்புறம் இந்தியாவே கொண்டாடுற ஒரு ஸ்டாரா மாறிட்டாரு அல்லு அர்ஜுன்.

இப்போ அடுத்தடுத்து அட்லி கூட ஒரு படம், லோகேஷ் கனகராஜ் கூட ஒரு படம்னு பிரம்மாண்டமான பட்ஜெட்ல (சுமார் 1400 கோடி!) பிஸியா இருக்காரு.

இந்த நேரத்துல தான் அவரைப் பத்தின ஒரு வினோதமான அறிக்கை சோஷியல் மீடியால பரவி பரபரப்பைக் கிளப்புச்சு.சமூக வலைதளங்கள்ல ஒரு போஸ்ட் பயங்கரமா சுத்துச்சு.

அதுல, “அல்லு அர்ஜுனை நேர்ல பார்க்க வர்றவங்க இதையெல்லாம் செய்யணும், இதையெல்லாம் செய்யக்கூடாது”னு ஒரு 42 ரூல்ஸ் போட்டிருந்தாங்க. இதைப் பார்த்ததும் நெட்டிசன்கள், “என்னப்பா இது? ஒரு நடிகரைப் பார்க்க இவ்வளவு பில்டப்பா?”ன்னு சொல்லி அவரை பயங்கரமா விமர்சிக்க ஆரம்பிச்சுட்டாங்க.

விமர்சனங்கள் அதிகமானதும், அல்லு அர்ஜுனோட டீம் உடனே ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டு இருக்காங்க: சோஷியல் மீடியால சுத்துற அந்த 42 நிபந்தனைகள் கொண்ட லிஸ்ட்டுக்கும், அல்லு அர்ஜுனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு தெளிவுபடுத்திட்டாங்க.

அது யாரோ வேணும்னே கிளப்பி விட்ட வதந்தி, அதை யாரும் நம்ப வேண்டாம்னு சொல்லியிருக்காங்க.

ரசிகர்களைச் சந்திக்கிறதுல அல்லு அர்ஜுனுக்கு எப்பவுமே சந்தோஷம் தான்னு அந்த அறிக்கையில சொல்லப்பட்டிருக்கு.


Watch – YouTube Click Shorts

What do you think?

‘மன ஷங்கர வரபிரசாத காரு’ இப்போ ஓடிடி-யிலயும் தடம் பதிக்க வந்தாச்சு