in

மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் மாசி பெரு விழா சுங்க வரி கட்டணம் வசூல் ஏலம்

மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் மாசி பெரு விழா சுங்க வரி கட்டணம் வசூல் ஏலம்

 

மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் மாசி பெரு விழாவை முன்னிட்டு வாகனங்களுக்கு சுங்க வரி கட்டணம் வசூல் செய்ய ஏலம் நடைபெற்றது.

மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைப்பெற்ற சுங்க வரி ஏலத்தில் ரூபாய்15 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் நடைபெற உள்ள மாசி பெரு விழாவை முன்னிட்டு மேல்மலையனூர் பகுதிக்கு வரும் வாகனங்கள் நுழைவு சீட்டு எடுப்பதற்கான சுங்கவரி ஏலம் விடும் நிகழ்வு நடைபெற்றது.

மேல்மலையனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய்சங்கர் தலைமையில் நடைபெற்ற சுங்கவரி ஏலத்தில் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சுங்கவரி ஏலம் கேட்டனர்.

அதில் அதிகபட்சமாக வளத்தி பகுதியைச் சேர்ந்த பட்டி சின்னதுரை என்பவர் ரூபாய் 15 லட்சத்திற்கு ஏலத்தை எடுத்தார்.

ஏலத்தில் பங்கேற்க ரூபாய் 50 ஆயிரம் வங்கிகள் முன் பணம் செலுத்தினால் மட்டுமே (DD) ஏலத்தில் பங்கேற்க முடியும், அதேபோல் ஏலம் எடுத்த அன்று மாலை 6 மணிக்குள் முழு தொகையும் கட்டி விட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.சுங்கவரி ஏலம் நிகழ்ச்சியில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க மேல்மலையனூர் காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

குறிப்பாக ஆண்டு தோறும் நடைபெறும் மேல்மலையனூர் மாசி பெருவிழாவில் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களான புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்யும் நிலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மேல்மலையனூர் நகருக்கு வருவதால் சுங்கவரி ஏலம் போட்டி போட்டுக்கொண்டு நடைபெற்றது.

கடந்த ஆண்டு ரூபாய் 7 லட்சத்தி 50 ஆயிரம் வரை சுங்கவரி ஏலம் எடுக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு அதிகபடியாக ரூபாய் 15 லட்சத்திற்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

What do you think?

பழனியில் தைப்பூசத் திருவிழா எடப்பாடியில் இருந்து காவடி எடுத்து வந்த பக்தர்கள்

10% கூடுதல் ஓய்வூதியம் வழங்கவும் கோரி தர்ணா