in

செஞ்சியில்  தூய்மையான பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம்

செஞ்சியில்  தூய்மையான பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம்

 

செஞ்சி சிறப்பு நிலை பேரூராட்சியில் தூய்மையான பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் வழங்கும் நிகழ்ச்சியை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்களுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்து வழங்கினார் என பேச்சு.

தமிழ்நாட்டில் மாநகராட்சிகள் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் விரிவாக்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சிறப்பு நிலை பேரூராட்சியில் பணிபுரியும் 150 கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் வழங்கும் நிகழ்ச்சியை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

அப்பொழுது பேசிய அவர் கடந்த வாரம் தமிழ்நாடு முதலமைச்சர் திண்டிவனம் சிப்காட் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் திட்டத்தில் பயன் பெற்ற பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்பொழுது வீடு இல்லாத வீடு இல்லாத தூய்மை பணியாளர்களுக்கும் கலைஞர் கனவு இல்லம் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். அந்த கோரிக்கையை நான் தான் முதலமைச்சரிடம் வைத்தேன் அப்போது அவரிடம் இது தொடர்பாக நினைவு கூறும் போது அவர் பெருமை அடைந்தார்.

அந்த அடிப்படையில் மக்கள் நலன் சார்ந்த ஆட்சி நடத்தும் முதலமைச்சர் இப்பொழுது இந்த உழைப்பாளிகள் பசியும் பட்டினியுமாக இருக்கக் கூடாது என்பதற்கான உயர்ந்த நோக்கம் தான் இது.

பேரறிஞர் அண்ணா சொன்னது போல் ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்று சொன்னது போல் ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்பது போல் மக்கள் நலன் சார்ந்த பல திட்டங்கள் இருந்தாலும் ஒரு நகரத்தின் சுகாதாரத்தை பேணி காக்கும் உங்களுக்கு காலை உணவு திட்டம் வழங்குவது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

இந்நிகழ்ச்சியில் பெண் தூய்மை பணியாளர் ஒருவருக்கு முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் காலை உணவை ஊட்டி விட்டு மகிழ்ந்தது தூய்மை பணியாளர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

What do you think?

பணம் வந்தா எல்லா வேறுபாடுகளும் தானா மறைஞ்சுடும் – நடிகர் ஸ்ரீகுமார்