in

பணம் வந்தா எல்லா வேறுபாடுகளும் தானா மறைஞ்சுடும் – நடிகர் ஸ்ரீகுமார்

பணம் வந்தா எல்லா வேறுபாடுகளும் தானா மறைஞ்சுடும் – நடிகர் ஸ்ரீகுமார்

 

சின்னத்திரையில ‘ஆனந்தம்’ சீரியல்ல ஆரம்பிச்சு இப்போ ‘கெட்டி மேளம்’ வரைக்கும் பல வருஷமா நம்ம வீட்டுப் பையனா வலம் வர்றவர் தான் நடிகர் ஸ்ரீகுமார்.

பிரபல இசையமைப்பாளர் சங்கர்-கணேஷ் ஜோடியில சங்கர் சாரோட மகன் தான் இவரு. ஆனா, அப்பாவோட பேரை மட்டும் வச்சு முன்னேறாம, தன் உழைப்பாலயே மேல வந்தவரு.

இப்போ இவரு ஒரு பேட்டியில சொன்ன விஷயம் தான் சோஷியல் மீடியால செம வைரல்!

ஸ்ரீகுமார் தன் அப்பா பட்ட கஷ்டங்களைப் பத்தி பேசும்போது ரொம்ப எமோஷனல் ஆகிட்டாரு:

“எங்க அப்பா ஒரு SC (பட்டியல் இனம்) அப்படிங்கறதுனால, அந்த காலத்துல அவர் இசையமைப்பாளரா வளர்றதுக்கு முன்னாடி நிறைய அவமானங்களைச் சந்திச்சிருக்காரு.

ஈயத் தட்டுல சாப்பாடு போட்டுத் தான் அவரை நடத்திருக்காங்க”னு அந்த வலியைப் பகிர்ந்துக்கிட்டாரு. இன்னைக்கு ஒரு பெரிய ஆளுமையா நம்ம பார்க்குற சங்கர் கணேஷ் பின்னாடி இவ்வளவு பெரிய போராட்டமும், சாதிய ஒதுக்குதலும் இருந்திருக்குங்கிறது பலரையும் அதிர்ச்சியாக்கிருக்கு.

சாதிக்கும் பணத்துக்கும் இடையில இருக்குற கனெக்ஷனைப் பத்தி ஸ்ரீகுமார் ஒரு ‘நச்’ உண்மையைச் சொல்லிருக்காரு: “நாம ஏழையா இருந்தா தான் நம்மகிட்ட சாதி பார்ப்பாங்க. ஆனா நாம பணக்காரன் ஆகிட்டா, யாரும் சாதியப் பத்திப் பேச மாட்டாங்க. பணம் வந்தா எல்லா வேறுபாடுகளும் தானா மறைஞ்சுடும்”

இவரு சொன்ன இந்த வார்த்தைகள் அப்படியே நிஜம்னு சொல்லி நெட்டிசன்கள் பலரும் இவருக்கு ஆதரவா கமெண்ட் போட்டு வராங்க.

“சினிமாவுல இருக்குறவங்க இதெல்லாம் பேசத் தயங்குவாங்க, ஆனா ஸ்ரீகுமார் தைரியமா உண்மையைச் சொல்லிருக்காரு”னு பாராட்டுக்கள் குவியுது.

What do you think?

Mellstroy Casino – новый горизонт азартных развлечений в Казахстане

செஞ்சியில்  தூய்மையான பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம்