in

வாராஹி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி வழிபாடு

வாராஹி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி வழிபாடு

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் ரயில் நிலையம் அருகே உள்ள ஸ்ரீ காளியம்மன் கோவிலில் உள்ள ஸ்ரீ ஞான வாராஹி அம்பாள் பீடம் அமைந்துள்ளது. இக்கோவிலில் தை மாத தேய்பிறை பஞ்சமி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

 

தேய்பிறை பஞ்சமியில் வாராஹி அம்பாளை வழிபட்டால் பூர்வஜென்ம கர்மா விலகும், திருமண தடை நீங்கும், குடும்ப ஒற்றுமை தழைத்தோங்கும், குழந்தை பாக்கியம் கிட்டும், சகல ஐஸ்வர்யங்கள் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இவ்விழாவில் கோவில் அர்ச்சகர் சத்தியமூர்த்தி, அரவிந்த் தலைமையில் கோவில் வளாகத்தில் உள்ள ஞான வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

ஏராளமான பெண்கள் அம்மனுக்கு நெய்தீபம், தேங்காயில் தீபம் ஏற்றி பல்வேறு வேண்டுதலுக்காக பிராத்தனை செய்தனர்.

இதனை தொடர்ந்து வாராஹி அம்பாளுக்கு பால், இளநீர், தேன் உள்ளிட்ட நறுமண திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
விழாவின் சிறப்பம்சமாக வாராஹி அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு மஹாதீபாராதனை காட்டப்பட்டது. இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று வாராஹி அம்மனை வழிபட்டு சென்றனர்.

What do you think?

நாடாளுமன்றத்தில் நடப்பதை பார்த்து 140 கோடி மக்களும் தலைகுனிய வேண்டி உள்ளது என உணர்கின்றனர்