in

நாடாளுமன்றத்தில் நடப்பதை பார்த்து 140 கோடி மக்களும் தலைகுனிய வேண்டி உள்ளது என உணர்கின்றனர் 

நாடாளுமன்றத்தில் நடப்பதை பார்த்து 140 கோடி மக்களும் தலைகுனிய வேண்டி உள்ளது என உணர்கின்றனர் 

தமிழ்நாடு தலைகுனியாது பரப்புரை பொதுக்கூட்டம் அம்பத்தூர் மார்க்கெட் அருகே நடைபெற்றது அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக பொருளாளரும் நாடாளுமன்ற மக்களவை குழு தலைவருமான டி ஆர் பாலு அமைச்சர் சேகர்பாபு நாடாளுமன்ற உறுப்பினர் என் வி என் எஸ் கனிமொழி திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா ஆகிய நிர்வாகிகள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர் பி கே மூர்த்தி பகுதி செயலாளர் டி எஸ் பி ராஜகோபால் நாகராஜ் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட ஆயத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக மேடையில் பேசிய திமுக பொருளாளர் டி ஆர் பாலு,
நாடாளுமன்றம் நடக்கிறது என சொன்னால் உங்களுக்கே சிரிப்பு வருகிறது நாடாளுமன்றம் நடக்கவில்லை என உங்களுக்கே தெரிகிறது என கூறி பேச தொடங்கினார்.

நாடாளுமன்ற அவையில் பிரதமருக்கு என்ன மதிப்பு இருக்கிறதோ அதே மதிப்பு எதிர்க்கட்சி தலைவருக்கும் உள்ளது. ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் பேரவை தலைவரும் அவரை பேச அனுமதிப்பதில்லை. நாடாளுமன்றத்தில் நடக்கும் நிலையை பார்த்து மக்கள் தலையை குனிந்து உள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு தலைகுனையாது என்ற தலைப்பில் பேச வைத்துக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் என்றைக்கும் தலைகுனிய மாட்டார்கள். நாடாளுமன்றத்தில் நடப்பதை பார்த்தால் இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களும் தலைகுனிய வேண்டி உள்ளது என உணருகின்றனர்.

எதிர்கட்சி உறுப்பினர்கள் பேசுகின்றனர் என்ன பேசுகின்றனர் என கேட்பதில்லை, மிக மோசமான ஜனநாயகம் நாட்டில் நடக்கிறது. சீன ராணுவம் இந்தியாவில் ஊடுறுவி போர் பதற்றம் நிலவியது தொடர்பாக முன்னாள் மேஜர் ஜெனரல் எழுதிய புத்தகம் குறித்து பேச முயன்ற போது எதிர்க்கட்சித் தலைவரின் மை பத்து முறைக்கு மேல் அமைக்கப்பட்டது அவரை எதுவும் பேசவிடாமல் தடுத்துள்ளனர்.

கடந்த ஒரு வாரமாக எதிர்க்கட்சித் தலைவரை பேசவிடாமல் மறிக்கப்படுகிறார். ஜனநாயகத்தின் கோவிலான பாராளுமன்றத்திலேயே ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்படுகிறது.

இந்த நாட்டில் ஜனநாயகம் கேவலப்படுத்தப்படுகிறது. நாட்டின் பிரதமரே ராணுவம் செயல்படக்கூடாது என இருந்தது கேவலமாக உள்ளது. மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற ஒரு வார்த்தை கூட இடம் பெறவில்லை. மிக மோசமான முறையில் மத்திய அரசு தமிழ்நாட்டை நடத்தி வருகிறது.

எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்து இன்னும் நிறைவேறவில்லை. கோயம்புத்தூர் மற்றும் மதுரைக்கு மெட்ரோ ரயில் கேட்டிருந்தோம் 20 லட்சத்திற்கும் குறைவான மக்கள் உள்ளதாக கூறி திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நிராகரித்து உள்ளனர்.

மதுரை மற்றும் கோயம்புத்தூருக்கு மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிக்கப்பட்டதாக மூன்று வருடம் கழித்து பதில் அளித்துள்ளனர். இதைவிட மிக குறைந்த மக்கள் தொகை கொண்ட நவிமும்பை, ஆக்ரா,புவனேஸ்வர், இந்தூர் ஆகிய சிறிய நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை வழங்கிய மத்திய அரசு ஏன் மதுரைக்கு கோயம்புத்தூருக்கும் வழங்கவில்லை என நாங்கள் கேட்பது எங்களுடைய உரிமை.

அதே போல் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10.2% என கூறினார்கள். ஆனால் அப்படியே குறைத்துக் கொண்டு கடைசியில் 7.2 என கூறுகின்றனர். ஒரு நாட்டிற்கான தகுதியை நிர்ணயம் செய்யும் அகில உலக நிதியத்திடம் கொடுக்கும் அறிக்கையே தவறாக உள்ளதால் நமது நாட்டிற்கான தகுதியை குறைத்துள்ளனர்.

இப்படி ஒரு மோசமான நிலையில் இந்த நாட்டை ஆண்டு கொண்டு இருக்கிறார் என விமர்சனம் செய்தார்.

What do you think?

தமிழ்மாநில காங்கிரஸ் தென் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் விருப்பமனு விநியோகம்

வாராஹி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி வழிபாடு