in

தமிழ்மாநில காங்கிரஸ் தென் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் விருப்பமனு விநியோகம்

தமிழ்மாநில காங்கிரஸ் தென் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் விருப்பமனு விநியோகம்

தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணி (NDA)யின் முக்கிய அங்கமாக செயல்பட்டு வரும் த.மா.கா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் விருப்பமனுக்களை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார் விடுதியில் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் விருப்பமனுக்களை வழங்கி போட்டியிட விரும்பும் தொண்டர்களிடம் இருந்து விருப்பமனுக்களை பெற உள்ளார்.

   

கூட்டத்தின் முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது,தேர்தலுக்கான அடித்தள பணிகளை துவங்கி உள்ளோம் அதற்கான ஆலோசனை கூட்டம் இன்று துவங்கியுள்ளது..

கோவையில் 14ஆம் தேதி ஆலோசனை கூட்டம் சென்னையில் 17-ஆம் தேதி கூட்டம் நடைபெற உள்ளது. 19ஆம் தேதி திருச்சியில் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

எங்கள் கூட்டணி வெற்றி கூட்டணியாக செயல்பட வேண்டும் மக்கள் நம்பிக்கை பெரும் வகையில் தேர்தல் பணியாற்ற வேண்டும்.

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விருப்ப வேட்பாளர் மனுவை பூர்த்தி செய்து 25 ஆம் தேதிக்குள் சென்னையில் தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு தயாராக உள்ளார்கள் என்பதில் மாற்று கருத்து கிடையாது.திமுக அரசு தங்கள் அளித்த வாக்குறுதையில் 70% வாக்குறுதி நிறைவேற்ற வில்லை என்பது தான் உண்மை நிலை.

ஆட்சி முடிய போகும் சில மாதங்களில்
திட்டங்களை அறிவிப்பது ஏமாற்று வேலை.மக்களை மீண்டும் ஏமாற்ற, புதிய அறிவிப்புகளை வெளியிடுவது மக்களை முகம் சுளிக்க வைக்கும் வகையில் இருக்கிறது.

திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு இதுதான் உண்மை நிலையாக இருக்கிறது.கடந்த தேர்தலில் மின்கட்டணம் மாதந்தோறும் வசூலிக்கப்படும் என கூறினார்கள் ஆனால் கட்டணத்தை உயர்த்தி மக்களுக்கு சுமை ஏற்படுத்தி உள்ளார்கள்.

குற்ற சம்பவங்களை குறைப்போம் என திமுக கூறியது ஆனால் ஆட்சிக்கு வந்த பின் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

விஜயின் கட்சியின் சதவீதம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சதவீதத்தை சொல்லி வருகிறார்கள். யாரும் 10% குறைவாக சொல்லவில்லை, ஆனால் வாக்களித்த பின்பு அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்த முடியும், அது மக்கள்தான் அவர்கள் தான் எஜமானர்கள்.

இரண்டு கட்சிகள் தலைமையில் கூட்டணி குறித்து பேசுவதாக தகவல் வருகிறதே என்ற கேள்விக்கு, அதிகாரப்பூர்வமாக அது போன்ற தகவல் இல்லை என தெரிவித்தார் .

என் டி ஏ தலைமை கூட்டணி என்றால் மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் கூட்டணி. பாராளுமன்ற மரபுகளை யார் மீறினாலும் அவர்களை பேச அனுமதிக்க கூடாது அது தவறு.

இதில் கட்சி பாகுபாடு வேறுபாடு கிடையாது என ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

What do you think?

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை வரும் 17ஆம் தேதி கூடுகிறது

நாடாளுமன்றத்தில் நடப்பதை பார்த்து 140 கோடி மக்களும் தலைகுனிய வேண்டி உள்ளது என உணர்கின்றனர்