in

11 நவீன அறுவை சிகிச்சை கூடங்கள் முதல் அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்

11 நவீன அறுவை சிகிச்சை கூடங்கள் முதல் அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்

புதுச்சேரி கதிர்காமத்தில் அமைந்துள்ள இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 நவீன அறுவை சிகிச்சை கூடங்களை முதலமைச்சர் ரங்கசாமி இன்று திறந்து வைத்தார்.

 

அறுவை சிகிச்சை கூடங்களில் ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை கட்டுப்படுத்தி மையப்படுத்தப்பட்ட குளிரூட்டும் அமைப்பு, அறுவை சிகிச்சை கூடங்களுக்கு உரித்தான மின்விளக்குகள் மையப்படுத்தப்பட்ட மருத்துவ வாயு குழாய் அமைப்புகள், மின் சாதனங்கள், அறுவை சிகிச்சைகளுக்கான மருத்துவ உபகரணங்கள், தீயணைப்பு மற்றும் தீ எச்சரிக்கை அமைப்பு ஆகிய அதிநவீன வசதிகளை கொண்டுள்ளது.

அனைத்து வசதிகளுடன் கூடிய 11 நவீன அறுவை சிகிச்சை கூடங்கள், (மாடுலர் ஆபரேஷன் தியேட்டர்கள்) ரூபாய் 28 கோடியே 92 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கருவிகளுக்கு முதலமைச்சர் ரங்கசாமி கற்பூரம் காட்டி ஆரத்தி எடுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து ராஜ்பவன் தொகுதிக்கு உட்பட்ட இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம் கட்ப்பட உள்ளது.

பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார கட்டமைப்பு இயக்க நிதி பங்களிப்புடன் பொதுப்பணித்துறையின் மூலம் ரூ.11.93 கோடியில் கட்டடம் கட்ட பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கான பூமிபூஜை விழா இன்று நடந்தது.
முதல. அமைச்சர் ரங்கசாமி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

What do you think?

பி.எஸ்.பெரிய நாயகம் மேல்நிலைப்பள்ளியில் 198 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்குதல் 

சினிமாவில் பார்ப்பது வேறு அரசியல் வேறு என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்