பி.எஸ்.பெரிய நாயகம் மேல்நிலைப்பள்ளியில் 198 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்குதல்
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் திருமண்டலம் புதுக்கோட்டை பி.எஸ்.பெரிய நாயகம் மேல்நிலைப்பள்ளியில் 198 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி சண்முகையா வழங்கி பேசுகையில்.

மாணவர்கள் அனைவருக்கும் கல்வி மட்டுமே சிறந்தது அதுதான் உங்களின் சொத்து அதனால் அனைத்து மாணவர்களும் நன்றாக படிக்க வேண்டும் என்று அன்போடு பாசத்தோடு கேட்டுக்கொள்கிறேன்.
அதுபோல் தாய் தந்தையின் கனவையும் நீங்கள் நிறைவேற்றி கொடுக்க வேண்டும். நன்றாக படித்து நாட்டுக்கும் வீட்டுக்கும் சேவை செய்ய வேண்டும் என்று பேசினார்.
தொடர்ந்து குமாரகிரி ஊராட்சி பகுதியில் கிராம ஊராட்சி செயலக கட்டிடத்தை எம்.சி சண்முகையா திறந்து வைத்து மரக்கன்று நட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
அதன்பிறகு மறவன் மடம் ஊராட்சி பகுதி மற்றும் கோரம்பள்ளம் ஊராட்சி பகுதியில் பொது விநியோகம் கடை கட்டிடத்தை பொதுவிநியோகம் கடை கட்டிடத்தை திறந்து வைத்து ரேஷன் பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.


