in

‘புலி’ பட பிரச்சனைக்கு 1.5 கோடி ரூபாய் அபராதம்

‘புலி’ பட பிரச்சனைக்கு 1.5 கோடி ரூபாய் அபராதம்

 

பல வருஷமா இழுத்துட்டு இருந்த தளபதி விஜய்யோட இன்கம் டாக்ஸ் (IT) மேட்டர்ல இப்போ ஒரு முக்கியமான அப்டேட் கிடைச்சிருக்கு.

2015-ல ஆரம்பிச்ச இந்த ‘புலி’ பட பிரச்சனை இப்போ ஒரு முடிவுக்கு வந்திருக்கு.

2015 செப்டம்பர்ல விஜய் வீட்ல ஐடி ரைடு நடந்துச்சு. அப்போ ‘புலி’ படத்துக்காக விஜய்க்கு மொத்தம் 21 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தது தெரிஞ்சது.

இதுல 16 கோடி செக் மூலமா வந்திருந்தது.

ஆனா மீதி இருந்த 4.93 கோடி ரூபாய் கணக்குல காட்டாம ‘ரொக்கமா’ (Cash) வாங்குனதா ஐடி துறை கண்டுபிடிச்சாங்க. இதையடுத்து விஜய் தரப்பு அந்த வருஷத்துல எக்ஸ்ட்ராவா 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்குல காட்டி வரியைச் செலுத்திட்டாங்க.

வரியைத்தான் கட்டியாச்சே அப்புறம் என்ன பிரச்சனைனு பார்த்தா, “நீங்களா கணக்கைக் காட்டல, நாங்க கண்டுபிடிச்சதுக்கு அப்புறம்தான் கட்டுனீங்க.. அதனால வருமானத்தை மறைச்சதுக்காக உங்களுக்கு 1.5 கோடி ரூபாய் அபராதம் (Fine)”னு 2022-ல ஐடி துறை ஆர்டர் போட்டுச்சு.

“அபராதம் போடுறதுக்குன்னு ஒரு கால அவகாசம் இருக்கு. 2019-க்குள்ள போட வேண்டிய ஆர்டரை 2022-ல போட்டா எப்படிச் செல்லும்?”னு சொல்லி விஜய் சென்னை உயர் நீதிமன்றத்துல வழக்கு போட்டாரு.

இந்த வழக்கை விசாரிச்ச நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி இப்போ தீர்ப்பு சொல்லிருக்காரு: “விதிமுறைப்படி தான் அபராதம் விதிக்கப்பட்டிருக்கு. அதுல எந்தத் தப்பும் இல்லை”னு சொல்லி விஜய் போட்ட வழக்கை தள்ளுபடி செஞ்சுட்டாரு.

ஒருவேளை இந்த அபராதத்தை எதிர்த்து முறையிடணும்னா, நீங்க வருமான வரித் தீர்ப்பாயத்தை (IT Tribunal) அணுகலாம்னு கோர்ட் ஒரு வழியைச் சொல்லியிருக்கு.

புலி பட வரி விவகாரத்துல சின்ன பின்னடைவு. ‘லெகஸி’ டீசர் மூலமா அதிகாரத்துக்கான போட்டியில அதிரடி காட்டுறாரு.

“2014-க்கு போய் பிரதமரை மாத்துவேன்”னு ஒரு பக்கம் பொலிட்டிக்கல் அதிரடி கிளப்புறாரு. படங்களுக்கு 18 நாள்ல சர்டிபிகேட் குடுத்து வேலையை சிம்பிளாக்கிட்டாங்க.

What do you think?

நஞ்சில்லா நாட்டு காய்கறி விற்பனையை உழவர் சந்தையில் தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்…..

போதைப்பொருள் வழக்கில் நடிகைகள் அதிரடி கைது..