நாமக்கல் காந்தமலை முருகன் ஆலயத்தில் ஆலயத்தில் தைப்பூச தேர்த்திருவிழா
நாமக்கல் காந்தமலை முருகன் ஆலயத்தில் ஆலயத்தில் தைப்பூச தேர்த்திருவிழா – 11-ம் நாள்மஞ்சள் நீராட்டு மயில் வாகனத்தில் திருவீதி உலா
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் சிறிய குன்றின் மேல் உள்ள அருள்மிகு காந்தமலை அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் உள்ள முருகப்பெருமான் பக்தர்களுக்கு மேற்கு நோக்கி நின்றவாரு அருள்புரிந்து வருகிறார்.
தை மாத தேர்த்திருவிழா தினத்தை முன்னிட்டு ஜனவரி 24ந் தேதி காலை கொடியேற்றம் மிக விமர்சையாக நடைபெற்று துவங்கியது.
விழாவின் நிகழ்வாக நேற்று 11 – நாள் மஞ்சள் நீராட்ட்டு விழா நடைபெற்றது.
அப்போது முருகப் பெருமான் மயில் வாகனத்தில் எழுந்தருளினார் அப்போது மூலவர் முருகப்பெருமானுக்கும் உற்சவ முருகப் பெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீப உபசரிப்புகள் காண்பிக்கப்பட்டது.
பின்னர் திருவீதி உலா புறப்பாடு மிக விமர்சையாக நடைபெற்றது வழிநெடுக பக்தர்கள் தேங்காய் பழம் உடைத்து முருகப்பெருமானை வழிபாடு செய்தனர்.

