கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ சாலையில் உள்ளவர்கள் மீது மோதி விபத்து
வேகமாக வந்த ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ளவர்கள் மீது மோதி தலை குப்புற கவிழ்ந்த விபத்தில் நான்கு பேர் படுகாயம்….
சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி…..
விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரல்…..
திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் இருந்து மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று திருவண்ணாமலை பேருந்து நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தது.
மிக வேகமாக வந்த ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. மேலும் சாலை ஓரத்தில் இருந்த இருசக்கர வாகனம் மற்றும் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த வயதான தம்பதியின் மீதும் மோதியது.
இந்த விபத்தில் வயதான கணவன் மனைவி மற்றும் இரண்டு கல்லூரி மாணவிகள் என நான்கு பேர் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு சென்றனர்.
தற்போது இந்த விபத்தில் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் அப்போகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக நகர பகுதிகளில் இயங்கும் ஆட்டோக்கள் அதிக அளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு மிக வேகமாக செல்வதால் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. காவல் துறையினர் உடனடியாக ஆட்டோ ஓட்டுநர்களை கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

