in

ஆஃபர் என்று எதை கொடுத்தாலும் வாங்க நம் மக்கள் குவிந்து விடுவார்கள்

ஆஃபர் என்று எதை கொடுத்தாலும் வாங்க நம் மக்கள் குவிந்து விடுவார்கள்

காதலுக்கு விலை இல்லை, ஆனா காதலிக்கு மொபைல் 49 ரூபாய் என மொபைல் பொருட்கள் விற்பனை கடையின் ஆஃபர் விளம்பரத்தால் கூடிய ஆண்களும் ,  பெண்களும் கண்ணாடி கதவை உடைத்து கொண்டு ஒருவரை ஒருவர் தள்ளி கொண்டு கீழே விழுந்து எழுந்து ஆஃபர் பொருட்களை வாங்கி சென்றனர்.

   

தஞ்சை ஆற்றுப்பாலம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மொபைல் விற்பனை கடை நான்காம் ஆண்டு விழா சிறப்பு சலுகையாக இன்று மட்டும் பட்டன் மொபைல், நெக் பேண்ட், இயர்போன், ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் போன், பட்ஸ் ஆகியவை ஆஃபர் விலையில் வழங்கப்படும் என விளம்பரம் செய்து இருந்தது.

கடை திறப்பதற்கு முன்பே ஆண்கள், பெண்கள் கடை முன்பு கூடினர்.கண்ணாடி கதவை தள்ளி கொண்டு முன்டியத்து கொண்டு கடைக்குள் நுழைய முயன்றபோது தடுமாறி கீழே விழுந்தனர்.

கீழே விழுந்தவர்களை தூக்கி விடாமல் ஆஃபர் பொருட்களை வாங்க கடைக்குள் சென்று வெற்றி களிப்புடன் கையில் பொருட்களுடன் வெளியே வந்தனர்.

இதனால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஆற்று பாலம் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது..

What do you think?

கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ சாலையில் உள்ளவர்கள் மீது மோதி விபத்து

நாமக்கல் காந்தமலை முருகன் ஆலயத்தில் ஆலயத்தில் தைப்பூச தேர்த்திருவிழா