கழிவுநீர் கால்வாய் தீ பற்றி எரிந்ததால் கரும்புகை….. வாகன ஓட்டிகள் அவதி….
திருவண்ணாமலை நகரம் பெரியார் சிலை அருகே உள்ள கெங்கையம்மன் கோவில் பக்கத்தில் செல்லும் கழிவுநீர் கால்வாயில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் நகரம் முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.
திருவண்ணாமலை நகரம் பெரியார் சிலை நான்கு வழிச்சாலையாக உள்ளது. திருவண்ணாமலை நகருக்குள் செல்லவும், திண்டிவனம் செல்லவும், திருக்கோவிலூர் சாலை செல்லவும், வேலூர் சாலை செல்லவும் இந்த நான்கு வழிச்சாலையை பயன்படுத்தி பொதுமக்கள் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று பெரியார் சிலை கெங்கையம்மன் கோவில் பக்கத்தில் செல்லும் கழிவுநீர் கால்வாயில் மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர்.

இதனால் கரும்புகை ஏற்பட்டு நகரம் முழுவதும் பரவியதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டனர். தீ பற்றி எரிவதை கண்டுகொள்ளாமல் இருந்ததால் தீ மேலும் பரவி தூர் நாற்றம் வீசியதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.


