நாமக்கல் காந்தமலை முருகன் ஆலயத்தில் ஆலயத்தில் தைப்பூச தேர்த்திருவிழா – 7 – நாள் திருக்கல்யாணம் திருவீதி உலா
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் சிறிய குன்றின் மேல் உள்ள அருள்மிகு காந்தமலை அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் உள்ள முருகப்பெருமான் பக்தர்களுக்கு மேற்கு நோக்கி நின்றவாரு அருள்புரிந்து வருகிறார் .
தை மாத தேர்த்திருவிழா தினத்தை முன்னிட்டு 24ந் தேதிகாலை கொடியேற்றம் மிக விமர்சையாக நடைபெற்று துவங்கியது நேற்று 30-ஆம் தேதியும் பிப்ரவரிஅன்று முருக பெருமானுக்கு திருக்கல்யாண வைபவ நிகழ்வு மிகவும் விமர்சையாக நடைபெற்றது
முன்னதாக சீர்திருத்தங்கள் திருக்கோவிலை சுற்றி வந்து கோவில் முன்னே உற்சவ முருகப்பெருமான் தேவியருடன் எழுந்தருள பின்னர் விநாயகர் பெருமான் வழிபாட்டுடன் திருக்கல்யாண வைபவ நிகழ்வு துவங்கி திருமண சட்டங்கள் ஒவ்வொன்றாக நடைபெற்றது.
முக்கிய நிகழ்வான திருமாங்கல்யதாரணம் அணிதல் மாலை மாற்றுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் வேத மந்திரங்கள் முழங்க மிக விமர்சையாக நடைபெற்றது பின்னர் மூலவர் முருகப்பெருமானுக்கும் உற்சவ முருகப் பெருமானுக்கும் தீப தீப உபசரிப்புகள் காண்பிக்கப்பட்டது.
பின்னர் திருமண கோளத்தில் திருவீதி உலா புறப்பாடு மிக விமர்சையாக நடைபெற்றது வழிநடந்த பக்தர்கள் வழிபாடு செய்தனர் மேலும் ஒன்றாம் தேதி தேர் திருவிழா மிக விமர்சையாக நடைபெற உள்ளன விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மிகச் சிறப்பாக செய்து வருகின்றனர்


