11 வயசு சிறுமியை கோமாவிலிருந்து எழுப்பிய வடிவேலு காமெடி
வடிவேலுவோட காமெடியைப் பார்த்து நாம விழுந்து விழுந்து சிரிச்சிருப்போம். ஆனா, அதே காமெடி ஒரு குழந்தையை கோமாவிலிருந்து எழுப்பிருக்குன்னு சொன்னா நம்ப முடியுதா?
ஒரு 11 வயசு சிறுமி எதிர்பாராத விதமா கோமா நிலைக்குப் போயிட்டாங்க. டாக்டர்கள் அந்தப் பொண்ணோட அப்பாகிட்ட, “இந்தக் குழந்தைக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம் எது?”ன்னு கேட்டிருக்காங்க.
அதுக்கு அந்தப் பெத்தவங்க, “எங்க மகளுக்கு வடிவேலு காமெடின்னா உயிரு சார்”னு சொல்லிருக்காங்க. உடனே டாக்டர், அந்தப் பொண்ணோட காதுக்கு பக்கத்துல வடிவேலுவோட காமெடி காட்சிகளைத் தொடர்ந்து ஓடவிடச் சொல்லிருக்காரு.
என்ன ஆச்சரியம் பாருங்க.. அந்த காமெடியைக் கேட்டே அந்தப் பொண்ணு மெல்ல மெல்ல கோமாவிலிருந்து மீண்டு வந்துட்டாங்களாம்! அந்தப் பொண்ணு நேர்ல வந்து நன்றி சொன்னப்போ வடிவேலு கண்ணே கலங்கிட்டாராம்.
இன்னொரு சம்பவம் தேனியில நடந்திருக்கு. ஒரு பெண், தன் கணவர் திட்டுனதுனால மனசு உடைஞ்சுப் போய் தற்கொலை பண்ணிக்கலாம்னு தூக்குக் கயிறை ரெடி பண்ணிருக்காங்க.
அக்கம்பக்கத்துல இருக்குறவங்க கதவை உடைச்சுட்டு உள்ள போய் பார்த்தப்போ, அந்தப் பெண் கயிறைக் கையில வச்சுக்கிட்டு டிவி முன்னாடி உட்கார்ந்து சிரிச்சுட்டு இருந்தாங்களாம்!
போலீஸ் வந்து கேட்டப்போ, “சாகலாம்னு தான் போனேன்.. ஆனா டிவியில வடிவேலு காமெடியைப் பார்த்ததும் என்னையும் அறியாம சிரிப்பு வந்துருச்சு.
அப்புறம் சாகுற எண்ணமே போயிருச்சு”ன்னு சொல்லிருக்காங்க. இதைத் தெரிஞ்சுக்கிட்ட அந்த போலீஸ் அதிகாரி, வடிவேலுக்கே போன் போட்டு அந்தப் பெண்ணைப் பேச வச்சிருக்காரு.
அந்தப் பெண் “நீங்க தான் சார் என் உயிரைக் காப்பாத்துனீங்க”ன்னு சொன்னப்போ வடிவேலு நெகிழ்ந்து போய், “இனிமே இப்படி எல்லாம் பண்ணக்கூடாது”ன்னு அறிவுரை சொல்லிருக்காரு.


