in

தற்காலிகமாக போடப்பட்ட குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக விடிய விடிய வெளியேறிய குடிநீர்

தற்காலிகமாக போடப்பட்ட குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக
விடிய விடிய வெளியேறிய குடிநீர் 

கடலூர் மாவட்டம் வடலூர் சத்திய ஞான சபையில் வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி தைப்பூச ஜோதி தரிசனம் பெருவிழா நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஜோதி தரிசன பெருவிழாவை காண தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சன்மார்க்க நண்பர்கள் மற்றும் வள்ளலார் பக்தர்கள் வடலூருக்கு வருகை தருவது வழக்கம்.

இந்நிலையில் பக்தர்களின் வசதிக்காக சபை திடலில் தற்காலிக குடிநீர் இணைப்புகள் போடப்பட்டுள்ளது.

இந்த குடிநீர் இணைப்பில் திடீரென உடைப்பு ஏற்பட்ட காரணமாக நள்ளிரவு முதல் அதிகாலை வரை பல்லாயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் மைதான வளாகத்தில் வெளியேறி சேரும் சக அதிகமாக காட்சி அளிக்கிறது.

குடிநீர் கிடைக்காமல் பல பகுதிகளில் பொதுமக்கள் அவதி அடைந்துள்ள நிலையில் பல்லாயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணடிக்கப்படுவது பொதுமக்கள் மத்தியில் முகசூழிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே துறை சார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் சன்மார்க்க அன்பர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What do you think?

தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலத்தில் மக்கள் அதிகம் கூடும் இடத்தில் மனைவியின் மீது டீசல் ஊற்றி கொளுத்திய கணவன்

திருவண்ணாமலை மலையில தடை மீறி ஏறிய நடிகை! – வனத்துறையினர் விசாரணை