தென்னிந்திய நடை கால்பந்து சங்கம் சார்பில் ஆடவர் மற்றும் மகளிர் காண மாபெரும் கால்பந்து போட்டி நடைபெற்றது
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் முதலாவது தென்னிந்திய நடை கால்பந்து சங்கம் சார்பில் ஆடவர் மற்றும் மகளிர் காண கால்பந்து போட்டி நடைபெ ற்றுது. நெய்வேலி உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு கல்விக்கூடம் பயிற்றுனர் ஞானபிரகாசம் விளையாட்டுப் போட்டியினை தொடங்கி வைத்தார்
இரண்டு நாள் நடைபெற்ற போட்டியில் சென்னை, பெங்களூர் ,திருச்சி, நாகர்கோயில், கடலூர் ஆகிய ஊர்களைச் சேர்ந்த அணியினர் கலந்து கொண்டனர் ஆண்கள் பிரிவில் சுமார் 40, 50,60 வயதுக்கு மேற்பட்டோரும்
பெண்கள் பிரிவில் சுமார் 40 வயதிற்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு விளையாடினர்.

பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் ஆடவர் பிரிவில் 45 வயதினருக்கான போட்டியில் முதலிடம் NFSA அணியினரும் , இரண்டாம் இடம் சென்னை நீயு பட்டாபிராமன் அணியினரும் 50 வயதினருக்கு ஆன போட்டியில் நெய்வேலி எக்ஸ் SDAT அணி முதலிடமும் , இரண்டாம் இடம் நெய்வேலி NFSA, அணியினரும் மற்றும் மூன்றாம் இடத்தை தஞ்சாவூர் அணியினரும் , நான்கம் இடத்தை நெய்வேலி சாக்கர் அணியினரும் கைப்பற்றினார் 60 வயதினருக்கு ஆன போட்டியில் முதல் இடம் சென்னை பூவை மலர் , இரண்டாம் இடம் சென்னை Heros, மூன்றாம் இடம் Neyveli NFSA அணியினர் பெற்றனர்.

மேலும் பெண்கள் பிரிவில் திருச்சி, தமிழ்நாடு போலீஸ் அணி மற்றும் சென்னை டேலண்ட் எப்சி ஆகிய அணியினரும் முதல் மூன்று இடத்தை கைப்பற்றினார்.போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு தமிழ்நாடு நடை கால்பந்து சங்கத்தின் தலைவர் ஜெகதீஷ் சாய் சூழல் கோப்பைகளை பரிசாக வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு நடை கால்பந்து சங்கத்தின் தலைவர் சண்முகம், பொருளாளர் முனைவர் வில் விஜயன்,திமுக பிரமுகர் சாய் செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


