in

விஜய் ஸ்டைலில் CCL தொடரில் player மெர்சலாய் கொண்டாடிய அணியின் கேப்டன்!


Watch – YouTube Click

இதுல நம்ம ஊரு ‘வேல்ஸ் சென்னை கிங்ஸ்’ டீம் செஞ்சிருக்கிற ஒரு தரமான சம்பவம் பத்தி தான் இப்போ சோஷியல் மீடியா முழுக்க பேச்சா இருக்கு.

இந்த வருஷம் மொத்தம் 8 டீம் விளையாடுறாங்க. சென்னை டீம் ஆரம்பத்துல விளையாடின முதல் ரெண்டு மேட்ச்லயும் தோத்துட்டாங்க.

“அவ்ளோதான், இந்த வருஷம் சென்னை டீம் வீட்டுக்கு கிளம்ப வேண்டியதுதான்”னு எல்லாரும் பேச ஆரம்பிச்சுட்டாங்க. ஆனா, அங்கதான் ஒரு செம ட்விஸ்ட் காத்துட்டு இருந்துச்சு.

சென்னை டீம் செமி-ஃபைனல் (Semi-final) போகணும்னா ரெண்டு விஷயம் நடக்கணும்னு ஒரு பெரிய கணக்கு இருந்துச்சு:கர்நாடகா புல்டோசர்ஸ் டீம், போஜ்புரி தபாங்ஸ் டீமை தோற்கடிக்கணும்.

சென்னை டீம், மும்பை ஹீரோஸ் டீமை ரொம்ப பெரிய ரன் வித்தியாசத்துல ஜெயிக்கணும். “இதெல்லாம் நடக்கவா போகுது?”னு எல்லாரும் நெனச்சப்போ, மொதல்ல கர்நாடகா ஜெயிச்சு சென்னைக்கு ஒரு சின்ன வழியைத் திறந்து விட்டுச்சு.

மும்பைக்கு எதிரான அந்த மேட்ச் சென்னைக்கு ஒரு “வாழ்வா-சாவா” போராட்டம். அப்போதான் கேப்டன் விக்ராந்த் களத்துல இறங்கி ருத்ரதாண்டவம் ஆடுனாரு.

ரஷர் அதிகமா இருந்த நேரத்துல, பொறுப்பா விளையாடி ஒரு சூப்பரான செஞ்சுரி (Century) அடிச்சு சென்னை டீமோட ஸ்கோரை எகிற வச்சாரு.

பேட்டிங்ல விக்ராந்த் அதிரடி காட்டுனாருன்னா, பௌலிங்ல ஆதவ் கண்ணதாசன் 4 விக்கெட் எடுத்து மும்பை டீமை நிலைகுலைய வச்சாரு.

விக்ராந்த் சதம் அடிச்சதுக்கு அப்புறம், அதை கொண்டாடுன விதம் தான் இப்போ ஹைலைட். நம்ம தளபதி விஜய் ‘மெர்சல்’ படத்துல காட்டுற அதே ஸ்டைல்ல கையை விரிச்சு அவர் செலிப்ரேட் பண்ணாரு.

இதைப் பார்த்ததும் சென்னை ஃபேன்ஸ் மட்டும் இல்லாம, தவெக (TVK) தொண்டர்களும் குஷியாகி அந்த வீடியோவை வைரல் பண்ணிட்டு இருக்காங்க.


Watch – YouTube Click Shorts

What do you think?

மம்மூட்டி – மோகன்லால் இணையும் ‘பேட்ரியாட் ரிலீஸ் தேதி கன்பார்ம்! மெகா அப்டேட்!

பழனியில் தைப்பூசம் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கிய நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.